இலங்கைத் தமிழினதின் அவலநிலையை வைத்து சில புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களில் சிலர் பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள் சண்டையிட்டுக் கொண்டும் தமிழன விரோத செயற்பாடுகளை மேற்கொண்டும் வருகின்றார்கள். இவர்களின் சண்டைகளால் இலங்கை அரசாங்கத்திற்கு மிகுந்த நன்மையே ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில் லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பெண் தொடர்பாக சமூகவலைத்தளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களி்ல் வெளிவந்த தகவல்களை நாம் இங்கு தந்துள்ளோம்.
இங்கிலாந்தில் உணவு தவிர்ப்பை மேற்கொண்ட அம்பி சீவரட்ணத்தை சமூக ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ, சமய ரீதியாகவோ நான் எப்பொழுதும் திருமணம் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார் கனடியத் தமிழரும் கலைஞருமான கதி செல்வகுமார். இங்கிலாந்தில் வசிக்கும் அம்பி சீவரட்ணத்தின் போராட்டத்தின் உண்மை நிலை குறித்து விமர்சனங்கள் வெளியாகும் நிலையில் செல்வகுமாரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. கதி செல்வகுமார் வழங்கும் விளக்கம் இதோ ..
புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தமிழீழப் போராட்டத்தை மையமாக வைத்து தமக்குள்ளே முட்டி மோதி பல அலங்கோலங்களைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் தமிழர்களின் நலனுக்காக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து போராடக் களமிறங்கிய அம்பிகை அக்கா தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூகஊடகங்களிலும் அரசியல்வட்டாரங்களிலும் உலாவருகின்றன…. அவற்றில் சிலவற்றை நாம் இங்கு தந்துள்ளோம்….
அம்பிகை அம்மையார் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கை துரோகமாகும் , ஏமாற்றி விட்டுள்ளதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
https://www.youtube.com/embed/gXUZsMkxq4M