தமிழகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது புலம்பெயர் தமிழரின் பணத்திற்காக என திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆதாரங்களுடன் போட்டுடைத்து வருகின்றனர். 

இலங்கையில் ஜெயவர்த்தன அரசினால் மேற்கொள்ளப்பட்ட 1983 வன்செயலின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு மானசீகமாக உதவி புரிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர், புலிகள் சக இயக்கங்களை கொன்றொழித்து , இந்தியப் பிரதமரை இந்திய மண்ணிலேயே வைத்து படுகொலை செய்த பின்னர் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்;ற நிலையை எடுத்துக்கொண்டனர். 

இந்நிலையில் புலிகள் தமது இருப்பை இந்தியாவில் தக்கவைத்துக்கொள்வதற்கும் , புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதற்கும் அரசியல் அநாதைகளை நாடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதன்பொருட்டு தமிழகத்திலுள்ள அரசியல் அநாதைகளாகளான பழ நெடுமாறன், வை.கோபாலசாமி, சீமான், திருமால்வளவன், திருமுருகன்காந்தி போன்றோரை விலைக்கு வாங்கினர். 

புலம்பெயர் புலிகள் போடும் எலும்புத்துண்டுகளுக்காக தமிழ் உணர்வு கொட்டும் இவர்கள் எலும்புத்துண்டுகளை பங்கிட்டுக்கொள்வதில் அடிபட்டுக்கொள்வது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. 

அண்மையில் திருமால்வளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்பாட்டாளரான செங்கொடி என்பவள், விடுதலைப் புலிகளின் கொடியினை தமிழகத்தின் சந்து பொந்தெங்மேற்றி புலிகளுக்கு தமிழகத்தில் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது தங்கள் தலைவன் திருமால்வளவனே என்றும் நாம் தமிழர் கட்சியினர் 2009 ம் ஆண்டு மே மாதம் பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்றும் தெரிவித்திருந்ததுடன், நாம் தமிழர் என்ற கட்சியின் பெயர் கூட திருமால்வளவனால் மேற்கொள்ளப்பட்ட நடைபயணமொன்றுக்கு இடப்பட்டிருந்த பெயரே என்றும் தெரிவித்திருந்தார். 

அத்துடன் புலம்பெயர் எலும்புத்துண்டுகளில் அதிகபங்கு எங்களுக்கே வழங்கப்படவேண்டும் என்று செங்கொடி வேண்டியுள்ளார். இல்லை இல்லை விடுதலைச் சிறுத்தைகளை விட எங்களுக்கே அதிக எலும்புத்துண்டுகள் வழங்கப்படவேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஜீவன் என்பவன் தெரிவித்துள்ளான். 

அதற்காக அவன் முன்வைக்கும் வாதம் யாதெனில், புலிகள் மஹிந்த ராஜபக்சவிடம் மண்ணியிட்ட பின்னர், நாம் தமிழர் கட்சியே புலிகளின் கொடியை தமது கொடியாக்கி அக்கொடியை காப்பாற்றி வருகின்றதாம். அத்தடன் புலிக்கொடியே தமிழரின் கொடி என்றும் அவன் தெரிவிக்கின்றான்.

புலிக்கொடி பயங்கரவாத அமைப்பு ஒன்றின் கொடியாகும். புலிக்கொடி தமிழர்களின் கொடியென்றால் இலங்கைத் தமிழர்கள் யாவரும் பயங்கரவாதிகளா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் என்று தங்களுக்கு பெயர் சூட்டிக்கொன்ற கள்ளக்கடத்தல் கும்பலின் தலைவன் பிரபாகரன் புலிக்கொடியை தனது கொடியாக்கியிருந்தான். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் போரின் ஆரம்ப போராளிகளில் ஒருவரும் புதிய பாதை பத்திரிகையின் ஆசிரியரும் இலங்கையில் புலிகளால் கொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சுந்தரம் புலிகொடியை எவ்வாறு விமர்சித்திருந்தார் என்பது பலரும் அறியாத கதை. 

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் புலிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்த சுந்தரம், எதற்காக விடுதலைப் புலிகள் என்றும் அதன் கொடியாக புலிக்கொடியை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்றும் கேட்டுள்ளார். பதிலளித்த புலிகள் சோழரின் கொடி அது என்று தெரிவித்துள்ளனர். 

சோழருக்கும் தமிழருக்கும் எந்த தொடர்பும் கிடையாது, யாழ்பாணத்தை இறுதியாக ஆண்ட மன்னன் சங்கிலியனின் சின்னம் பன்றி. ஆகவே தமிழீழ விடுதலைப் பன்றிகள் என்ற பெயரை வைத்து பன்றிக்கொடியை ஏந்துங்கள் அதுவே உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். 

எனவே புலிக்கொடிக்கும் தமிழ் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை புலிவியாபாரிகள் உணர்ந்து கொள்ளவேண்டுமென்று இலங்கைநெற் வேண்டுதல் விடுக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *