வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேருந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக முன்னால் தமிழ் பயங்கரவாதியும் அமரிக்க தம்பதியான அலன் தம்பதியினரை கடத்தி கப்பம் பெற்றவரும் இந்தியாவில் சூலைமேட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவருமான சர்வதேச பயங்கரவாதி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.

செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான  சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்,  கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் இன்று  (11.06.2021) ஆரம்பிக்கப்பட்ட, குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *