யாழ் மருத்துவமனைகளில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது நடவடிக்கை பாயுமா? பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் சர்ச்சையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  ……அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மதியம் அலுவலகத்தில் யாரும் இல்லாதபோதும் அவர் முதல் தளத்தில் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்’ என்று கூறப்பட்டுள்ளது….

யாழ் மருத்துவமனையிலேயே வைத்து ஊழியருடன் பாலியல் இரட்டை அர்த்தங்களுடன் கேள்விகளைக் கேட்பது பெண் ஊழியர்களின்  உடல் அமைப்பு பற்றி விமர்சிப்பது அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்து அவர்களது நடத்தை குறித்து விமர்சிப்பது ஆகியவற்றில் அவர் ஈடுபட்டதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

திடீரென என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு முதல் தளத்தின் அழுது கொண்டே வந்து நின்றேன். அப்போது எதேச்சையாக மருத்துவர் ராஜ…. முதல் தளத்துக்கு வருவதைக் கண்ட முத்….இ உடனடியாக கீழே இறங்கிச் சென்று விட்டார். பின் மருத்துவர்  வீட்டுக்குக் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு மீண்டும் முதல் தளத்துக்கு வந்து என்னிடம் பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றார் மு…..

பாலியல் நோக்கங்களுடன்  மருத்துவமனையில் கடமையாற்றும் பெண் ஊழியரைத் தொடுவது போன்றவற்றில் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம்  புகார் அளித்தபோதும்  நிர்வாகம் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என அந்தப் புகார் கூறுகிறது. என்னை விட்டுவிடும்படி மன்றாடி கேட்டுக் கொண்டேன். இருப்பினும் அவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்……

ஆனால் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்ட அந்த மருத்துவர் தன்னைப் பற்றி இனிமேலும் யாராவது புகார் அளித்தால் பதிலடி இருக்குமென எச்சரித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸப்பில் பெண் ஊழியரின்  புகைப்படத்தைப் பார்த்து ‘ஏநசல உரவ’ என்றும் அவர்களுடைய தோற்றம் குறித்தும் கருத்துத் தெரிவித்து வந்திருக்கிறார். 

இவருடைய நடத்தை  சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றம் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *