கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்புவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.வடமராட்சி முள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையே திறக்கப்பட்டவுள்ளது.கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டு திறக்கவுள்ளார்.
இதில் உள்ளூராட்சி உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்ளூராட்சி மன்றச் செயலாளர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.