கோண்டாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , தலைமறைவாக இருந்த ஆவா குழுவின் தலைவர் அகிலசுமன் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இவர்களிடம் இருந்து 2 வாள், 3 கோடரி மற்றும் முச்சக்கரவண்டி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்று போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கோண்டாவில் தாக்குதல் லீ குழுவினர் மீது ஆவா குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.