வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் இருவர் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளார்கள். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த 14 பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை நிகழ்த்தியிருந்தது.
இந்த நிலையிலேயே வடமாகாணத்தில் ஆவா குழுவோ அல்லது வேறு எந்த குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் இல்லை என்று பிரதி பொலிஸ் மா அதிபர் தர்மரத்ன தெரிவித்துள்து குறிப்பிடத்தக்கது .