யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய
உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ஈடுபட்டனர் என்று வழங்கப்பட்டன.
முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலைப்
பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளி ஒருவர் ஆபத்தான நிலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது கடமையைப் புறந்தள்ளி மூத்த நிலைஆண் தாதிய
உத்தியோரும் இளநிலை பெண் தாதிய உத்தியோகத்தரும் தகாத உறவில் ஈடுபட்ட நிலையில்
மருத்துவர் ஒருவரால் நேரடியாகக் கண்டறியப்பட்டு வழங்கப்பட்ட முறைப்பாட்டின்
அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் இரவுக் கடமையின் போது இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில்
சேர்க்கப்பட்ட நோயாளி ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த நோயாளியின் நிலமை கடுமையாக
இருந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரே கடமையில் இருந்துள்ளார். ஏனையோர் கடமை
நேரத்தில் காணவில்லை என்று மருத்துவரால் தேடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பிரிவின் அறை ஒன்றை மருத்துவர் திறந்த போது, ஆண் தாதிய
உத்தியோகத்தர் ஒருவரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் தகாத உறவில் ஈடுபட்டதனைக்
கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகவே அவர்களை தனது அலைபேசியில் ஒளிப்பதிவு செய்த
மருத்துவர், சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
சுமார் 40 வயதுடைய ஆண் தாதிய உத்தியோகத்தரும் சுமார் 28 வயதுடைய பெண் தாதிய
உத்தியோகத்தருமே இவ்வாறு தகாத உறவில் ஈடுபட்ட போது ஆடையின்றி ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்கள் மற்றும் சக தாதிய
உத்தியோகத்தர்களால் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டது.
“உரியவர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்தன. அதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆண் தாதிய உத்தியோகத்தருக்கு எதிரான இதற்கு முன்னரும் பல முறைப்பாடுகள் உள்ளன.
சம்பவம் தொடர்பில் நிர்வாக ரீதியான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விசாரணைகள்
நிறைவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்படும். சுகாதார அமைச்சே
மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்
மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதே வேளை குறித்த பெண் தாதியுடன் ஆண்தாதிகள் மாறி மாறி உடலுறவு கொள்வதாகவும் வைத்தியசாலையில் கடுமையான நோயால் அவதியுறுபவர்களுக்கு வழங்கப்படும் போதை மருந்தை இவர்கள் உட்கொண்டு விட்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரியவருகின்றது. இதே போல் ஏனைய விடுதிகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் பரவலாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ் மருத்துவமனைக்குள் ஊழியராக இருக்கும் முருகமூத்தி யாழ் மருத்தவமனைக்குள் வேலை செய்யும் பற்றீசியாவுடன் பாலியல் உறவில் மருத்துவமனைக்குள் ஈடுபட்டு வருவதாக றஜிகரன் தெரிவித்துள்ளார்.