யாழ். போதனா வைத்தியசாலையிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் தகனம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மாத்திரமே மின்சாரம் மூலம் சடலங்களை தகனம் செய்யும் வசதி காணப்படுவதாகவும் அங்கு நாள் தோறும் நான்கு பேரை மட்டுமே தகனம் செய்யக்கூடிய வசதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் தகனம் செய்யப்படாத நிலை காணப்படுவதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.