கஸ்ரோவின் வழிகாட்டலில் நீண்டகாலமாக செயற்படும் ” நந்தவன இளவரசனை”நந்தவனத்தில் பாஸ்போட்டை பறிகொடுத்த எல்லோருக்கும் கணிசமாகத் தெரியும். குறிப்பாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை தமது பெயருக்கு மாற்றித்தர முடியாவிட்டால் மண்டையில் போடுவோம் என மிரட்டப்பட்ட ஜெயதேவனுக்கு மிக நன்றாகவே தெரியும்.
நாம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் இவரை அறிமுகம் செய்கின்றோம். யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த நந்தகோபன் 1989ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். மணலாறுசெஞ்சோலை 4 பயிற்சிமுகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டார். 1990ம் ஆண்டில் கஸ்ரோ தீவுப்பகுதி அரசியல் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது கஸ்ரோவின் மெய்ப்பாதுகாவலராக நந்தகோபனை இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து முள்ளிவாய்க்காலில் கஸ்ரோவை விட்டு தப்பியோடி சரணடையும் வரைக்கும் கஸ்ரோவின் நிர்வாகத்தில் இருந்த மிகமூத்த உறுப்பினர் இவர்தான்.
ஆயுதங்களை கீழே போடுவதோ அன்றி சரணடைவது என்பதோ தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு அல்ல என்பதை முழு உலகமும் நன்கு அறிந்திருந்தது.இறுதிவரை அடிபணியப் போவதில்லை என்றும் தளபதி சூசை அவர்கள் வழங்கிய செவ்வியுடன் இதனை ஒப்புநோக்கும் பொழுது, தளபதி சூசை அவர்களின் ஒப் புதல்கூட இன்றி தன்னிச்சையாக இந்த முடிவை கே.பி எடுத்ததாகவே நாம் கொள்ள முடியும். இந்த விடயத்தில் நந்தகோபனின் சரணடைதலை யாரும் ஒப்புக்கு கூட கேள்வி கேட்டுவிடக்கூடாது. விளங்குதா தமிழ் மக்(கு)களே??? இந்த இடத்தில் இந்திய இராணுவத்திடம் சரணடைந்து KKS இல் சிறையிருந்த கஸ்ரோ அண்ணா பற்றியும் ஏன்? எதுக்கு? என்று யாரும் கேள்வி கேட்ககூடாது. இவை எல்லாம் எமது தலைவரின் தந்திரோபாயங்கள் எனத்தான் சேரமான் சொல்லுவார்.
இந்த சரணடைவை செய்து பல இலட்சங்கள் கையூட்டு கொடுத்து மலேசியாவுக்கு வந்த நந்தகோபன் தான் தமிழில்” DIRTY TRICKS” புரியும் பதிவு – சங்கதி- தமிழ்க்கதிர்- ஈழமுரசு – தமிழ் நெற்- ஈழநாடு- கறுப்பு போன்றவற்றின் “மீடியா கவுஸ்” பிரதம ஆளுனர் எனத்தெரியவருகின்றது.
எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவலின்படி கேபிக்கு ஆதரவான ஒரு முன்னாள் செயற்பாட்டாளரை கொலை செய்வதற்கான கட்டளையை ( நந்தகோபன்) பிறபித்ததுக்கான ஆதாரமொன்றும் கிடைக்க பெற்றுள்ளது. இவ்வாறான குற்றச்செயல்கள் புலம்பெயர் தேசங்களில் இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கே இட்டுச்செல்லுமென தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே புலம்பெயர் தமிழர்களே “உள்ளிருந்து கொல்லும்” வியாதி தொடர்பில் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.