ஆரம்பத்தில்(80களில் ) ஒரு குழுவாக வடமராட்சி பகுதியில் செயற்பட்ட கொள்ளை குழுவில் இவரும் இருந்தவர். வடமராட்சியில் சில தபாலகங்கள், மற்றும் பரு. வட இந்து மகளிர் கல்லூரியில் ஆய்வு கூட இரசாயன பொருட்களை கடத்தி சென்றமை போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர். பின்னர் புலிகளின் தொடர்பு கிடைத்து புலிகளுடன் சேர்ந்துகொண்டவர் தான் இந்த ரகு. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த இவரது கூடுதல் செயற்பாட்டுக்காலம் இந்தியாவிலேயே கழிந்தது. இவரது பொறுப்பற்றதனதால் தமிழ் நாட்டில் இருந்த பல போராளிகள் துர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் விலகி செல்லவும் நேர்ந்தது. இதில் சில போராளிகள் தமிழ் நாட்டில் தங்கியிருந்த வீட்டிலேயே பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு அதனால் மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவங்களும் 1988/89களில் நடந்தது.
இவற்றுக்கும் மேலாக குண்டப்பா தொடர்பான முறைப்பாடும் தலைமைக்கு கிடைத்தது. வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆதரவாளரான வண்ணமக்காவுடன் தகாத உறவில் குண்டர் ஈடுபட்டதான ஆதாரங்கள் தமிழ் நாட்டில் செயற்பட்டு நாடு திரும்பிய போராளிகளால் தலைமைக்கு சொல்லப்பட்டது. இதையடுத்து 1989இல் நாட்டுக்கு அழைக்கப்பட்ட குண்டர் வடமராட்சியில் மேஜர் ஜேம்ஸ்க்கு கீழ் தண்டனையில் அமர்த்தப்பட்டார்.
இந்த நேரத்தில் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்கள் கட்டாயம் ஒவொரு நாளும் நடத்தவேண்டுமென்ற அறிவுறுத்தல் தலைமையால் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சண்டை அனுபவம் எதுவும் அறியாத நீண்டகாலம் இந்தியாவில் தங்கிவிட்ட குண்டப்பா வல்வெட்டித்துறையில் வைத்து இந்திய படைக்கு எதிராக நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 14 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய இராணுவம் வல்வை படுகொலையை நடாத்தியது. வல்வெட்டித்துறையை மையமாக வைத்து தலைமறைவு இயக்கமாக இருந்த பல போராளிகளின் செயற்பாடு குண்டரின் இந்த தாக்குதலால் வல்வெட்டித்துறைக்குள் செயற்படமுடியாமல் போய்விட்டது. சண்டைக்கு மிக பயந்த குண்டர் கூட வல்வெட்டித்துறைக்குள் தங்கமுடியாமல் போய்விட்டது. இவரது பயந்த தன்மை தொடர்பில் தலைமைக்கு சொல்லப்பட்டது. குண்டர் மணலாறுக்கு அழைக்கப்பட்டார். ஆனால் எந்தவித தகவலும் சொல்லாமல் 1989 இறுதியில் இந்தியாவுக்கு தப்பியோடிய குண்டர், இந்தியாவிலிருந்தவாறு தான் இயக்கத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார்; இவை தான் குண்டரின் இயக்க வரலாறு.
1990இல் பத்மநாபா கொலை நடந்த போதும் பின்னர் 1991இல் ராஜிவ் காந்தி கொலை நடந்த போதும் இவர் இந்திய புலனாய்வாளர்களால் உத்தியோகபூர்வமாக கைது செய்யப்படவில்லை. இவர் கியூ பிரிவின் மற்றும் ஜபியின் informer ஆக மாறிக்கொண்டார். விடுதலை புலிகள் இயக்கத்தின் எல்லா இந்திய செயற்பாடுகளையும் ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்தார். சாதாரணமாக புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தவர்கள் கூட இந்தியாவில் கைது செய்யப்பட்ட போதும் இவர் சுதந்திரமாக நடமாடினார். இது எப்படி என வல்வெட்டித்துறை சார்ந்த மக்களே பலர் கேள்வி எழுப்பினர். இன்றும் அந்த சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்திய பொறுப்பாளர் குண்டு சாந்தனின் திருச்சி மறைவிடம் காட்டிக்கொடுத்ததில் குண்டரின் பங்கும் உண்டு. அதேபோல் பின்னர் பொறுப்பாக இருந்த கிருபன் கைது செய்யப்படவும் குண்டரே காரணம் . குண்டர் IB க்கு புலிகள் இயக்கம் மற்றும் தமிழ் நாட்டு செயற்பாட்டாளர்கள்,மற்றும் பிரபாகரன் தொடர்பாக என கொடுக்கப்பட்ட 35 பக்க வாக்குமூல பிரதி இவரது காட்டிக்கொடுப்புக்கு ஆதாரமாகவுள்ளது. இந்த ஆதாரத்தை அம்பலப்படுத்தவும் முடியும்.
பின்னர் 1997இல் முதல் மாவீரன் சங்கரின் தந்தையையும்( சூசையின் மாமா) இந்தியாவில் காட்டிக்கொடுத்து அவர் இந்தியாவைவிட்டு தப்பியோடிய வரலாறும் உள்ளது.
பின்னர் இந்திய உளவுப்படையின் ஆசீர்வாதத்துடன் பிரித்தானியாவுக்கு குண்டப்பா வந்து சேர்ந்தார். பிரித்தானியாவில் புலிகளின் நடவடிக்கைகளை இந்தியாவுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார். 2000 ஆண்டில் தொடக்கத்தில் வன்னிக்கு தொடர்புகொண்ட குண்டர் செஞ்சோலை சிறார்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற திடீர் கரிசனையோடு செஞ்சோலை பொறுப்பாளர் ஜனனியுடன் கதைக்க முற்பட்டார். இவரது இந்த கரிசனையை சந்தேகத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர் சமாதான காலத்துடன் இவர் திடீரென கஸ்ரோவின் அணியினரால் ஈர்க்கப்பட்டார். கஸ்ரோவுக்கோ அல்லது அவருக்கு கீழ் செயற்பட்டவர்களுக்கோ இவரது மறுபக்கம் தெரிந்திருக்கவில்லை.
அந்த நேரத்தில் இவரது திடீர் பிரசன்னம் தொடர்பாக வல்வெட்டித்துறை சமூகத்தால் கூட சந்தேகமாக பார்க்கப்பட்டது. சொல்லவும்பட்டது. ஆனால் எவரும் அக்கறைகொள்ளவில்லை.
அதேவேளை பிரித்தானியாவில் பழைய இயக்க உறுப்பினர்களை ஒன்று சேர்த்து வன்னியிலிருந்து கடற்புலி சூசை தொலை பேசிவழியால் உரையாற்றிய போது இவர்(குண்டப்பா) தானும் இருப்பதாக இந்த உரையாடலை ஒழுங்கு செய்தவர்களிடம் சூசைக்கு சொல்லுமாறு கூறிய போதும் சூசை அதை அசட்டை செய்யவில்லை. ஆனாலும் பிரித்தானியாவில் இயங்கிய ஜபிசிக்குள் கஸ்ரோ அணியின் ரமணன் என்பவர் ஊடாக ஊடுருவிக்கொண்டார். ரமணனின் வழிகாட்டியாக மாறத்தொடங்கினார். குண்டரின் வழியில் ரமணனும் திருமணஞ்செய்து கொண்டே ஜபிசியில் பணிபுரிந்த இன்னொரு திருமணமான அறிவிப்பாளினியுடன் கள்ள தொடர்பு வைத்துக்கொண்டார். ரமணணின் இந்த பலவீனத்தை பாவித்து ரமணணிடமிருந்து அனைத்துலகத்தின் செயற்பாடுகளின் தகவல்களை சேகரித்துக்கொண்டே இருந்தார். இந்தியாவிலிருந்து இவருடைய உளவுத்துறை தொடர்பாளரான ஜபி அதிகாரியுடன் தொடர்புகொள்ளும் போது தகவல்களை பரிமாறிக்கொள்வார்.
மே18க்கு பின்னர் இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்களிடம் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி தமிழ் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படி இந்திய உளவுத்துறையால் குண்டப்பா பணிக்கப்பட்டார். இதன்படி தமிழ் நாட்டில் உள்ள நெடுமாறன், வைகோ ஆகியோரை தொடர்புகொண்டு ” தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்ற நெடுமாறன் ஜயா சொல்லும் நம்பகத்தகவல்” இவருடையதுதான். இதன்மூலம் தமிழ் நாட்டில் ஏற்பட இருந்த கொந்தளிப்பு சிறு கண்ணீரும் இல்லாமல் ஒடுக்கப்பட்டதின் முக்கிய சூத்திரதாரி குண்டர்தான்.
தற்போது இந்தியாவின் ஆலோசனைப்படி பிரிந்து முரண்பட்டிருக்கும் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை தடுப்பதற்கு ஏற்ற சூழல் புலிகள் இயக்கத்தை உரிமை கோரி தமது விருப்பத்திற்கு ஏற்ப மக்களை குழப்பும் ஒரு அணியை உருவாக்குவதே. அதற்கு பெரும் பங்காற்றும் ஒரு புலிகள் இயக்கத்தின் தொடர்பாடல் சாதனம் இணையத்தளம் மட்டுமே. இந்த வகையில் உத்தியோகபூர்வ ஊடக பிரிவு என்ற தளத்தை தமது கையில் எடுத்து இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படத்தொடங்கியுள்ளனர். இவருடன் சேர்ந்து நிருபன், மணி என்போரும் இந்த நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றனர்.
யார் இந்த நிருபன்?
நெல்லியடியில் முன்னர் சுக்குளாவுக்கு கீழ் 1986/87களில் செயற்பட்டவர். பின்னர் இந்தியா இராணுவத்திடம் பிடிபட்டு கே.கே.எஸ் சிறையில் இருந்தவர். 1990 தொடக்கத்தில் இந்திய இராணுவம் விடுவிக்கப்பட்ட போது வடமராட்சியில் சூசையுடன் சிறிது காலம் இயங்கியவர்.பின்னர் தேசிய தலைவரின் தங்குமிட வெளிகளப்புலனாய்வு பாதுகாப்புக்கு பொறுப்பாக 1994 வரைக்கும் இருந்தார். பின்னர் இவர் விசேட சிறுத்தை படையணிக்கு ஒரு பிரிவின் பொறுப்பாளராக கேணல் ராயுவின் கீழ் செயற்பட்டார். 1996 இல் யாழ்ப்பாண இடம் பெயர்வின் பின்னர் யாழ்ப்பாணம் சென்ற சிறுத்தை அணிக்கு பொறுப்பாக சென்றிருந்தார். ஆனால் இவர் அந்த படையணியின் போராளிகளை சரியாக வழி நடாத்தாமல் யாழ்ப்பாணம் சென்ற பல நூறு சிறுத்தை போராளிகள் முற்றாக முற்றுகைக்குள் ஆழிக்கப்பட இவரே முக்கிய காரணமாகும். இவருடன் பொறுப்பாக சென்ற ஈஸ்வரன் மற்றும் இவரது ஒழுக்க குறைவான எதிரி பிரதேசத்தில் நடந்துகொண்ட முறைகள் சக போராளிகளால் இனங்காணப்பட்டு தலைமைக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து மீண்டும் வன்னிக்கு அழைக்கப்பட்ட நிருபன் கேள்விக்கு இடமற்ற முறையில் இயக்கத்தை விட்டு துரத்தப்பட்டவர்.
1.புலிகள் இயக்கத்தில் தலைவரால் கட்டமைக்கப்பட்ட சிறுத்தை படைக்கட்டுமானமே அழிவதற்கு காரணமானவர்
2.எதிரி பிரதேசத்தில் நிலைபெற்றிருந்த போராளிகளை கட்டுப்பாடாக வழி நடத்தாமை
3.போராளிகள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த பொதுமக்களின் வீடுகளை சூறையாடியமை
4.போராளிகளுக்குள் கட்டுப்பாடற்ற முறையில் பாலுறவு
5. பொறுப்பாக சென்ற நிருபன், ஈஸ்வரன் ஆகியோரும் மேற்கூறிய அதே தவறுகளை விட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் துரத்தப்பட்டனர்.
இங்கு நிருபன், ஈஸ்வரன் இருவருக்கும் மரணதண்டனை விதிக்க கூட தலைவர் எண்ணியிருந்தார் என அறியப்படுகிறது.அந்தளவு ஒரு படைக்கட்டுமானத்தையே அழித்தபெருமை இவரை சேரும். பின்னர் இயக்கத்தில் சிறுத்தை படையணி கலைக்கப்பட்டது. இதை தலைவர் தனது பெரும் தோல்வியாகவே கருதினார்.
இயக்கத்தில் இருந்து துரத்தப்பட்ட நிருபன் விசுவமடுவில் ரியூசன் நடாத்திக்கொண்டிருந்தார். 2001ம் ஆண்டில் நிதித்துறை பாண்டியனால் தொடர்பு கொள்ளப்பட்டு நிதித்துறைக்கு வேலை செய்யும்படி கேட்கப்பட்டார். ஆனால் பாண்டியன் இவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பின்னரே நிருபனின் தொடர்பு குறித்து தலைவருக்கு கூறியுள்ளார். அப்போது தலைவர் சொன்ன ஒரே பதில் நிருபனை பயன்படுத்தக்கூடாது. அவன் எனது கனவு படையணியையே அழித்தவன் என்பதாகவே இருந்தது.
பின்னர் லண்டனுக்கு வந்துகொண்டார். இவர் லண்டனுக்கு வந்த போது அப்பாச்சி(முன்னர் மணலாற்றில் தளபதியாக இருந்தவர்) இவருக்கு ஒரு கடை போட உதவினார். ஆனால் நாளடைவில் நன்றி மறந்து அப்பாச்சிக்கே ஆப்படித்தவர் என அறியப்படுகிறது. பிரித்தானியாவில் இவரது வரலாறு தெரியாதவர்களுக்கு தலைவரின் அருகில் இருந்த கதைகளை விலாசமடித்து வழமைபோல் சாதாரணமாக விலகி வந்ததாகவே கதையளப்பார்.
மே18க்கு பின்னர் மிகவும் அறியப்பட்டவராக நிருபன் உள்ளார். எப்படி? நாட்டில் இருப்பவர்களுக்கு உதவுவது பணமனுப்புவதாக கூறிக்கொண்டு பண சேகரிப்பில் தன்னிச்சையாக ஈடுபட்டுவருகிறார். இவற்றுக்கு எந்தவொரு கணக்கு வழக்கும் இல்லை. அதே நேரம் தனக்கு தெரிந்த அறிமுகமானவர்களுக்கு மட்டும் பணம் சென்றடைகிறது.
தற்போது தமக்கு பாதுகாப்பு வேண்டி விடுதலை புலிகள் இயக்கத்தையே தம்முடையதாக்கி குண்டரும் நிருபனும் உரிமை கொண்டாட தொடங்கியுள்ளனர்.
இன்னும் வரும்……….