இன்றைக்கு 14 வருடங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய தலைமையால் ; இயக்கத்தால் ஓரங்கட்டப்பட்டு  போராட்டம் வேண்டாமென  தப்பிவந்து பிரித்தானியாவில்  குடியுரிமை கேட்டவர்  தான்  இன்று தலைமை பதவிக்கு ரூட்டுவிட்டுக்கொண்டுள்ள  ரூட் ரவி. இவர்தான்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவில் பிரதான பங்கு வகித்தவர் என்பதை மறுஆய்வு  கட்டுடைக்கிறது.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டும்  உடைத்ததாக நினைத்துவிட வேண்டாம். பிரித்தானியாவில்  பிரித்தானிய தமிழர் பேரவையின் சுயாதீனத்தை  புலிமுத்திரை குத்தி  ஏகபோக அதிகாரம்  செலுத்த முற்பட்டவரும் இவரே என்பதை இவ்விடத்தில் கட்டுடைக்கின்றோம்.

பிரித்தானியாவில்  நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டையும்  தனது அதிகாரத்தினூடே  செய்யவேண்டுமென  ஏகபோக உரிமை  கேட்டு  தடைக்கல்லாக இருப்பதாகவும்  அறியப்படுகிறது.

இவர் புலித்தலைமையால்  நாட்டில்  ஓரங்கட்டிய பின்னணியை  பின்னர் தேவைப்பட்டால்  பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாக தரப்பார்க்கிறோம். ஆனால்  சிறு குறிப்பு ;ரூட்டில் இவர் பொறுப்பாக இருந்தபோது  தமிழ்செல்வனால்  ஓரங்கட்டப்பட்டவர்  என்பது  இங்கு சொல்லவேண்டிய  தேவையுள்ளது.ஏனெனில்  தமிழ்செல்வனுக்கும்  கஸ்ரோவுக்கும் இருந்த அதிகாரப்போட்டியில்  ரூட்டு ரவி பிரித்தானியா வந்த பின்னர் கஸ்ரோவின் நண்பனாகிக்கொண்டார். பின்னர் கஸ்ரோ தத்தெடுத்துக்கொண்டு  ரவியை  தனது  பிரித்தானிய  அரசியல் ஆலோசகராக்கிகொண்டார். மே18 முள்ளிவாக்கால் தேசிய அழிவின் பின்னர்  தன்னை  தேசிய தலைவராக்கி கொண்டு  செயற்பட்டு வருகிறார்.

இந்த புதிய தேசிய தலைவரே  தமிழீழ விடுதலை புலிகளின் தேசிய தலைவர் அவர்களின் வழிகாட்டலில்  உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய  கூட்டமைப்பை  பிளவுபடுத்தி  முன்னர்  தனது ரூட்டுக்கு  பொருளாதார ஆலோசகராக இருந்த வரதராசனை தலைவராக்கி  தமிழ் தேசிய மக்குகள் முன்னணியை  உருவாக்கினார். இங்கு  இவரது  முன்னைய ரூட்டு  பொருளாதாரத்தினை ஈட்டியதா?  வங்குரோத்தில்  போனதா? என்பது  ரூட்டில்  முன்னர்  கடமையாற்றிய சிற்றூழியர் வரைக்கும் தெரியும். அது நடந்து முடிந்த விடயம். தற்போது  ரூட்டு ரவி  எடுத்துள்ள அரசியல் பிரவேசமும்  வங்குரோத்தில்  இன்றைய  தேதியில் வந்துள்ளது.

இன்றைய தேதியில்  தமிழ் தேசியத்தின் பெயரால்  பாராளுமன்ற செல்லவேண்டிய  பிரதி நிதித்துவத்தை கணிசமாக  குறைத்த வரலாற்று பங்கின் முதன்மை பாத்திரதாரி இவர்தான். வரலாறு  தண்டிக்குதோ இல்லையோ? தமிழ் மக்கள் இந்த தமிழ் சுயதேசிய அயோக்கியர்களை தண்டிக்கவேண்டும் என மறுஆய்வு கேட்டுக்கொள்கிறது. இவருடன் கூட பங்களித்த எல்லோரையும் தனித்தனியே அம்பலப்படுத்துவோம்.

யாழ்ப்பாணத்தில்  சிங்கள பெரும்பான்மை கட்சியில் போட்டியிட்ட விஜயகலாவையும்; ஒட்டுக்குழுவுக்கு இரு ஆசனங்களையும்  பங்கு போடச்செய்தவர்கள்  யார்?

திருகோணமலையில்  தமிழ் பிரதி நிதித்துவமே  இழந்திருக்க கூடிய  அபாய நிலைக்கு  இட்டுச்சென்றவர்கள்  யார்?

வன்னியில்  பிரதி நிதித்துவம்  குறைந்ததுக்கு காரணம்  யார்?

(தேர்தல் முடிந்தவுடன்  செல்வம் அடைக்கல நாதனையும்  பிரித்தெடுக்கும்  சூழ்ச்சியிலும்  ஈடுபட்டிருந்தது யார்?)

புலத்தில் இணையத்தளங்களில்  தமிழீழம்  காணத்துடிக்கும்  தேசிய மக்குகளும் ; பெயரிலி போலி பின்னூட்டக்கார தேசிய வித்தகர்களுக்கும்; பெயரிலி  சுயதேசிய மக்கு ஆய்வாளர்களும்   இந்த  தேசிய  சிதைவுக்கு  பொறுப்புக்கூறவேண்டியவர்கள்  என்பதில் மாற்றுகருத்துக்கு  இடமில்லை.

வரலாற்றில் பதியப்படுவதுடன்  நின்றுவிடாது?………………………………….அந்தகாலத்துக்காக…………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *