யாழ் இந்துக்கல்லுாரியை இலக்கு வைத்து, ஓரினச்சேர்க்கை வலையமைப்பு இயங்கி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேபநபரான மகிந்தன் என்பவனைக் கைது செய்ய பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி யாழ் இந்துக்கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவன், மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றிருந்தார்.
எனினும், தெய்வாதீனமாக கம்பிகளில் சிக்கி கீழே விழுந்ததால், மாணவனிற்கு உயிராபத்து ஏற்படவில்லை.
படுகாயமடைந்த மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த மாணவர் கணினி விளையாட்டுக்களிற்கு அடிமையானவர், கணினி விளையாட்டு சவால்களை ஏற்று கீழே குதித்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆயினும், அந்த தகவல்கள் தவறானவை, என்பதுடன் அவை திட்டமிட்டு பரப்பப் பட்டவை என்பது உண்மை.
அந்த பாடசாலையை குறிவைத்து இயங்கிய ஓரினச்சேர்க்கையாளர் வலையமைப்பினால் மாணவன் பாதிக்கப்பட்டு, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
மாணவன் தரையில் குதிப்பதற்கு முன்னர், தனது உயிர் மாய்ப்பு முயற்சி பற்றி விபரமாக புத்தகப்பையில் 7 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அத்துடன் மற்றொரு கடிதம் எழுதி தனது காற்சட்டை பைக்குள் வைத்திருந்துள்ளார்.
தனது தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து எழுதப்பட்ட 7 பக்க கடிதம் புத்தகப் பையில் உள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த கடிதங்கள் பாடசாலை நிர்வாகத்தினால் கைப்பற்றப்பட்டது. உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைக்கவில்லை. பின்னர் தாமதமாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவனின் கடிதத்தின் மூலம், இந்துக்கல்லுாரியை குறிவைத்து சிலரால் இயக்கப்படும் ஓரினச்சேர்க்கை வலையமைப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவனின் கடிதத்தில் இரண்டு நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் ஒரு நபர், பாடசாலைக்கு அண்மையாக இயங்கிய காலைக்கதிர் ஊடக நிறுவனமொன்றின் கட்டிடத்தில் பல மாதங்களின் முன்னர் வரை தங்கியிருந்துள்ளார்.
அவரே ஓரினச்சேர்க்கை வலையமைப்பின் பிரதான சூத்திரதாரியென குறிப்பிடப்படுகிறது.
அவர் தனது தங்குமிடத்திற்கு மாணவர்களையும் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
14,15, 16 வயதான மாணவர்களை தனிமையாக அழைத்துச் சென்று, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, அதை வீடியோ படம் பிடித்து வைத்துள்ளார்.
மாணவர்கள் விழிப்படைந்து, அவரது பிடியிலிருந்து வெளியேற முயலும் காலகட்டத்தில் அந்த வீடியோக்களை காண்பித்து அவர்களை மிரட்டியுள்ளார்.
அந்த வீடியோக்களை வெளியிடப் போவதாக மிரட்டி, மாணவர்களை வெளியிலுள்ள ஓரினச்சேர்க்கையாளர்களிற்கும் வழங்கி வந்தார் என்றும் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பிட்ட சந்தேகநபர் போதை மாத்திரைகளும் விற்பனை செய்பவரா என்றும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே வேளை குறித்த சந்தேகநபரை அந்த கட்டடத்தில் தங்க வைத்தது காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த வித்தியாதரன் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதே வேளை வித்தியாதரனும் முழுமையான ஓரினச்சேர்க்கையாளரா என குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய முற்பட்ட போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் வித்தியாதரனும் உள்ளாரா என்பது தொடர்பாகவும் பொலிசார் விசாரணைகளை நடாத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே வித்தியாதரன் யாழ் இந்துக்கல்லுாரியின் முன்னாள் அதிபரான நிமலனுடன் சேர்ந்து யாழ் இந்துக்கல்லுாரியில் பாரிய முறைகேடுகளை செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை பாதிக்கப் பட்ட மாணவன் பொலிசாரிற்கு வழங்கிய முறைப்பாட்டில் ஊடகவியலாளர் வித்தியாதரனால் தான் பல முறை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அவர் தனது வீடியோக்களை வைத்து மிரட்டுவதால் இம் முடிவு எடுத்தாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை ஊடகவியலாளர் வித்தியாதரனிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்வதற்கான பொலிஸ் நடைமுறைகளை ஆரம்பித்து உள்ளனர்.
ஊடகவியலாளர் வித்தியாதரன், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் உதவியை நாடியுள்ளதுடன், ஜனாதிபதி ரணில்
அவர்களுடன் ஊடகவியலாளர் வித்தியாதரன் நேற்று இரவு நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டாலும் இவ் விடயங்களில் ஜனாதிபதி நேரடியாக தலையிட முடியாது என்பதால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் முறைப்பாட்டை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக யாழ் தலைமையக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழரசுக் கட்சியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஊடகவியலாளர் வித்தியாதரனை காப்பாற்றுவதில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முழு மூச்சாக செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.
இவற்றை தனது எழுத்துப் புலமையை வைத்து ஊடகவியலாளர் வித்தியாதரன் மடைமாற்றுவார் என்பது மட்டும் உள்மை என மூத்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.