பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சுரேன் ராகவன் அவர்கள், இரட்டைப் பிரசாவுரிமையுடையவர் எனக் குறிப்பிட்டே அந்த மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை அனுப்பி வைத்துள்ளவர் அழுத்கம இந்திரரத்ன தேரராவார். சுதந்திரக்கட்சி சார்பிலேயே சுரேன் ராகவலன் அவர்கள் பொதுஜன பெரமுனவிலிருந்து தேசியப்பட்டியலுக்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.இலங்கை அரசியல் யாப்பிற்கு ஏற்ப இரட்டைப் பிரசாவுரிமையுடையவர் ஒருவர் இலங்கைப் பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.