வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்ட குழுவினரால் கிளிநொச்சி பகுதியில் ஒருவர் வெட்டுக் காயத்திற்குட்பட்ட நிலையில் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் வீட்டில் இருந்த வாய் பேசமுடியாத ஒருவருக்கும் அடிகாயங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் முன் கதவு, தொலைக்காட்சி, அலுமாரி உட்பட பல பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டது.இச்சம்பவம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று புதன்கிழமை 11 மணியளவில் நடைைபெற்றுள்ளது.
இதனால் குடும்பத் தலைவரின் கை, கால் மற்றும் முதுகு பகுதியில் வெட்டு காயத்திற்குட்பட்ட நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பளைப் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.