”இலங்கையர்களே ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும், வெளிநாட்டினர் அல்ல”
”யாவற்றிலும் முதலாவதாக, இலங்கை பிரச்சினைக்கு இலங்கையர்களே தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டினர் அல்ல.
இறு தியில் இலங்கை சிங்களவர்கள் , முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் தீவாகும். இது இந்தியர்கள், ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களின் தீவு அல்ல.”
ஐ.தே.க . ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்டு விடுதலை புலிகளுடன் ஒப்பந்தமொன்றை செய்தால் சுதந்திரக்கட்சிஅதற்கு உடன்படாதென்றும் அதனை குறைமதிப்பிற்கு உட்படுத்துமென்றும் என்று அவர்கள் பயப்படுவார்கள்,
இது தொடர்பாக எதிர்மாறாகவும் அஞ்சப்பட்டது.. (ஜனாதிபதி) சந்திரிகா சமாதானத்துக்காக ஏதாவது செய்ய முயன்றபோது, அந்த நேரத்தில்ரணில் அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவார் என்று அவர் அஞ்சினார்.
இது சமாதானத்தை மிகவும் கடினமாக்கியது, சில சமயங்களில் புலிகளுடன் சமரசம் செய்ய ஒரு பொதுவான தளத்தைக் கண்டுபிடிப்பதை விட இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் அதிக சக்தியை செலவிட்டதாக உணர்ந்திருந்தன .
1998 முதல் 2005 வரை இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளுக்கு பிரதான அனுசரணையாளராக செயற்பட்டிருந்த நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள்சமாதான ப் பேச்சுவார்த்தையாளரான எரிக் சொ ல்ஹெய்முடன் டெய்லி மிரர் ட்விட்டர் வெளியூடான கலந்துரையாடலின்போது எழுப்பப் பட்டிருந்த கேள்விகளும் அவர் அளித்திருந்த பதில் களும் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பதில்; 1998 ஆம் ஆண்டில் நோர்வேயை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமா ரதுங்க மற்றும்விடுதலைப் புலிகள்ஆகியோர் சமாதானநடவடிக்கைகளுக்கான மூன்றாம் தரப்பாக அணுகினர் .. அவர்கள் மற்றைய விருப்பங்களைப் பற்றியும் கலந்துரையாடினர்.
ஆனாலும் நோர்வேயை தேர்ந்தெடுத்தனர்., ஏனென்றால் அது இலங்கைதொடர்பாக குறிப்பிட்டதொரு ஆர்வம் இல்லாத அதேசமயம் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொலைதூர த் திலுள்ள நாடாகவும் இருந்தது.
,அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கையில் உள்ள சில முக்கிய வெளிநாட்டுசெயற்பாட் டாளர்களுக்கும் முக்கியமானதாகவிருந்தது.
முதல் இரு ஆண்டுகளில்சகலவுமே கொழும்பில்முழுமையானஇ ரகசியமாக இருந்தது.. புலிகள் தரப்பில் உள்ள முயற்சிகள் குறித்து (ஜனாதிபதி) சந்திரிகாவும், வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரும் மட்டுமே அறிந்திருந்தனர்.
ஆனால் சந்திரிகா புலிகளால் தாக்கப்பட்ட பின்னர் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் முன்னோக்கி சென்று எங்கள் வகிபாகத்தை பகிரங்கப்படுத்தினார்.
2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை செய்தோம். முதல் இரண்டு ஆண்டுகளாக இது நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமாக இருந்தது, இருபுறமும் யாரும் கொல்லப்படவில்லை.
ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படுவது குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டது, இது இரு தரப்பினரும் இலங்கையில் இந்த பிரச்சினைக்கு ஒருசமஷ்டி தீர்வை ஆராவார்கள் என்று கூறியது.
இது இடம்பெற்றபோது புலிகள் அதன் பலத்தில் உச்சத்தில் இருந்தன ர்.. கொழும்பில் உள்ள பெரும்பாலானஆட்கள் புலிகள் பலவீனமாக இருந்ததால் சமாதான முன்னெடுப்புகளுக்கு இழுக்கப்பட்டுஅதனை செய்ததாகக் கூறினர்.
ஆனால் அவர்கள் ஆனை இறவை கைப்பற்றியிருந்ததுடன் , இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு மிகஅண்மித்ததாக இருந்தனர்.
விமான நிலையத்தின் மீதான தாக்குதல்கள் இலங்கை பொருளாதாரத்தில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தின. எனவே அவர்கள் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது விடுதலைப் புலிகள் அதன்பலத்தில் உச்சத்தில் இருந்தனர் .
படிப்படியாக சமாதான நடவடிக்கைகள் சீர்குலைந்து இரு தரப்பிலும் கொலைகள்இடம்பெறத் தொடங்கின.
ஆனால் புலிகள் அரசாங்க தரப்பை விட அதிகமாக செய்திருந்தது.. மகி ந்த ராஜபபக்ச ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆரம்பத்தில் இருந்தே விடுதலைப் புலிகள்வீதி யோர வெடிபொருட்களுடன் ஜனாதிபதி பதவியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தத் தொடங்கின ர்.புலிகள் மகி ந்த வைத் தேர்ந்தெடுக்கப்படுவதை சாத்தியமாக்கின ர்..
ஆரம்பத்தில் இருந்தே பிரபாகரன் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தலைவராக இருந்தார், அரசியல் தலைவராக வெற்றிபெறவில்லை. அவர் ஒவ்வொரு தவறையும் செய்யத் தொடங்கினார்,
ஒரு கொலைசெய்யும் படையை காட்டிலும் ஒரு மரபுசார் இராணுவத்தைப் போல செயற் படத் தொடங்கினார்.
எனது கருத்தில், போரின் முடிவில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. புலிகள் பொதுமக்களை தங்கள்உறுப்பினர் களுக்காக பணயக் கைதிகளாக வைத்திருந்தன ர்.,
அதே நேரத்தில் இலங்கை ஆயுதப்படைகள் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியதுடன் மற்றும் மருத்துவமனைகள் போன்ற சிவில் நிறுவனங்களை குறிவைத்தன.
பாரிய போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பது மிகவும் தெளிவாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.ஆனால் இது சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் தீர்மானிக்க வேண்டியதாகும்.
கேள் வி; இலங்கையின் அரசியல் தலைமையினரிடையே தொலைநோக்கு இல்லாததைப் பற்றி யும் இது ஒரு அரசியல் தீர்வை வென்றெடுப்பதைசிக்கலாக்கியதென்பது பற்றியும்நீங்கள் பேசினீர்கள் . விரிவாகக் கூற முடியுமா?
பதில் ;ஐ. தேக . மற்றும் ஸ்ரீ.ல.சு.க.ஆகிய கொழும்பின் இரண்டு பிரதான அரசியல் முகாம்களால் ஒருபோதும் ஒத்துழைக்க முடியவில்லை.
அவர்கள் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் ஒரே பதவிகளுக்கு போட்டியிட்டனர். இலங்கையின் இரு பிரதான கட்சிகளால் பொதுவானநிலைப்பாட்டிற்காக ஒன்றிணைந்து செயற் படும்ஆற்றல் இல்லாதது சமாதான நடவடிக்கைகளை மிகவும் கடினமாக்கியது.
ஐ. தே. க.ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்டு புலிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், சுதந்திரக்கட்சி உடன் வந்து அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அவர்கள் பயப்படுவார்கள், நேர்மாறாகவும். (ஜனாதிபதி) சந்திரிகா சமாதானத்துக்காக ஏதாவது செய்ய முயன்றபோது, அந்த நேரத்தில் ரணி ல் அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவார் என்று அவர் பயந்தார் .
இது சமாதானத்தை மிகவும் கடினமாக்கியது, சில சமயங்களில் புலிகளுடன் சமரசம் செய்வதற்கு ஒரு பொதுவான தளத்தைக் கண்டுபிடிப்பதை விட இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் அதிக சக்திகளை செலவிட்டதாக உணர்ந்தன.
கேள்வி ; ஒரு சமாதான பேச்சுவார்த்தையாளரென்ற உங்கள் வகிபாகத்தின டிப்படையில் பெறுபேறை மாற்றுவதற்கு நீங்கள் ஏதாவது செய்திருக்க முடியுமா?
பதில்; ஒரு பொதுவான தளத்தைக் கண்டறியபிரதான கட்சிகள் மத்தியில் நோர்வேயால் உண்மையில் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.
ஒருவேளை நாம் இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்றியிருக்கலாம். அதை அடைவதற்கு கொழும்பு அரசியலில் பொதுவான சில முயற்சிகளை மேற்கொள்வது கடினம், அது கடினமாக இருந்திருக்கும், ஆனால் நாங்கள் அந்த பக்கத்தில் இன்னும் அதிகமாக செய்திருக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள மதத் தலைவர்களைச் சென்றடைய நாம் இன்னும் அதிகமாகச் செய்திருக்க வேண்டும்.
நான் கண்டியில் , பல முறைமகாநாயகர்களுடன் பேசினேன், ஆனால் குறிப்பாக பவுத்த தலைவர்களுடன் ஒரு நல்லு றவை ஏற்படுத்துவது சிறப்பானது., ஏனென்றால் இலங்கையில் மதம் மிகவும் முக்கியசெல்வாக்கை .செலுத்துகிறது.
பிரபாகரனை அதிகளவுக்கு சந்திக்கஎமக்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்..பிரபாகரனை அதிகமானோர் சந்தித்ததை நாங்கள் உறுதி செய்திருக்க வேண்டும். அவரது பார்வை மிகவும் குறுகியதாகவிருந்தது.. அவர் உண்மையில் இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை,
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றது போன்ற மடமைத்தனமான மற்றும் குற்றமான தொ ன்றை அவர் செய்தார்.
உலகப் பார்வைஅவருக்கு மிகக் குறைந்த தாக இருந்தது. அதிகமான மக்கள் அவரை சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய தலைவர்களை அவரை சந்திக்க செல்ல ஊக்குவிக்க முயற்சித்தோம்,
ஆனால் இது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது. அவர்கள் பிரபாகரனிடம் செல்வதை விரும்பவில்லை.
அடிப்படையில்.நானும் நோர்வேயும் அவரைச் சந்தித்த ஒரே வெளிநாட்டினர்.
கடந்த 15 ஆண்டுகளில் எனக்குத் தெரிந்தவரை, பிரபாகரன் எந்தவொரு சிங்கள, மற்றும் இந்தியர்களையும் சந்தித்ததில்லை.
அடிப்படையில் அவர் சந்தித்த அனைவருமே தமிழர்கள், அவர் உலகின் பரந்த பார்வையைப் பெற்றிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
கேள்வி ; பிரபாகரனுக்கு அரசியல் அல்லது புவிசார் அரசியல் குறித்து எந்த அறிவும் இல்லை என்று நீங்கள் பலமுறை சொன்னீர்கள். நீங்கள் பிரபாகரனுடன் அதிக நேரத்தை செலவிடவில்லை என்றால், அவருக்கு இந்த அறிவு இல்லை என்று எப்படி உறுதியாக நம்பினீர்கள்?தெளிவுபடுத்த முடியுமா?
பதில்; நான் பிரபாகரனுடன் முழு மையாக சிறிதுநேரத்தை செலவிட்டேன், மேலும் பிரதான பேச்சுவார்த்தையாளரான அன்டன் பாலசிங்கத்துடன் நிறைய நேரத்தை செலவிட்டுள் ளே ன் ..
ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் அல்லது மற்றவர்களை , நேரடியாக பிரபாகரனை சந்திக்க வைப்பதன் மூலம் முன்னோக்குகளைப் பற்றி அதிகம் கற்றுக் கொள்ள முடியும்.
அந்த நேரத்தில் நான் இந்த கருத்துக்களை பிரபாகரனிடம் கூறியிருந்தால் , அவர் அதை என்னிடமிருந்து கேட்க விரும்பி யி ருக்கமாட்டார்..
என் பார்வையில், அன்டன் பாலசிங்கம் சமாதான முன்னெடுப்பில் கதாநாயகனாக இருந்தார். சில நேரங்களில் பிரபாகரன் பாலசிங்கத்தை செவிமடுத்தார்., சில சமயங்களில் இல்லை. அவர் அவ்வாறு செய்யாதபோது, அவர் முக்கியமாக ஒரு கொரில்லா சக்தியாக இல்லாமல் ஒரு மரபுரீதியான இராணுவமாகப் போராடுவது போன்ற தவறுகளைச் செய்தார், இது 2009 இல் முடிவுக்கு வந்தது. இது பாலசிங்கம் கடுமையாக வாதிட்ட சமஷ்டி தீர்வு அல்ல.
கேள் வி; இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் தொடர்பாக கவனத்திற்கு எடுத்துக்கொண்ட பிறகு, இப்போது அவர்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காகப் இஸ்லாம் தொடர்பான பீதியை பயன்படுத்தி இஸ்லாமியர்களை தங்கள் புதிய எதிரியாகக் கண்டுகொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அது தொடர்பாக சிறிது தெரிவிக்க முடியுமா?
பதில்; இதற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. முஸ்லி ம் பயங்கரவாதம் ஒரு உண்மையான விட யம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது இந்த கொடூரமான கொலைகளை நாங்கள் கொண்டிருந்தோம்..
அரசாங்கம் அந்தவிடயத்தை தீவிரமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதக் குழுக்களை நீங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தால், அவர்கள் சில சமயங்களில் வெளிநாட்டினரால் ஊக்குவிக்கப்படுவார்கள்.
ஆனால் அது தவிர முஸ்லிம்களையும், இலங்கையில் உள்ள நான்கு மதங்களையும் மரியாதையுடன் சந்திப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
இலங்கையில் அனைத்து சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை எமக்கு நாம் நினைவூட்டுவோம்.
சமுதாயத்தில் முஸ்லிம்களை அணுகுவதும், முஸ்லிம்களிடமிருந்து எதிரிகளை உருவாக்காமலிருப்பதுவு ம் மிக முக்கியம்.
மோதலின் போது கூட முஸ்லிம்கள் அரசு தரப்பில் இருந்தனர், ஒருபோதும் அரசுக்கு எதிராக இல்லை.
ஆனால் இந்த தாக்குதலுக்கு முன்பே முஸ்லிம் விரோத உணர்வு குறிப்பாக பவுத்த மதகுருமார்களிடையே நிறைய இருந்தது. ஆனால் முஸ்லிம்களுக்குப் பின்அவர்கள் செல்லும் வழி இஸ்லாமியவாதபீதியினால் என்பதை நான் காண்கிறேன்.
பதில்; சமாதான நடவடிக்கைகளின்போது முஸ்லிம்கள் ஒரு காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தனி முஸ்லி ம் தூதுக்குழுவைக் கோரினர்.
விடுதலை புலிகள் அதனை நிராகரித்திருந்ததுடன் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே இரு தரப்பு உரையாடலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தின ர்.
அதன் விளைவாக முஸ்லிம் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்க தூதுக்குழுவில் சேர்க்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு தனி அரசை ஆதரிக்கவில்லை.
கே ள்வி: யுத்தம் முடிவடைந்ததிலிருந்து வந்த கதை பல்வேறு ஐ. நா. மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கான முயற்சிகள்போன்றவையாகும்.. சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அந்த தீர்மானங்களில் நான் மிகக் குறைந்தளவு முன்னேற்றத்தைக் காண்கிறேன். நல்லிணக்கத்தை மேம்படு த்துவதற்கு உங்களைப் போன்ற வெளிசெயற்பாட் டாளர்கள் என்ன செய்ய முடியும்?
பதில்: ’முதலாவதாக, இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கையர்களே தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டினர் அல்ல. இறுதியில் , இலங்கை சிங்கள, முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் தீவாகும்.
இது இந்தியர்கள், ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களின் தீவு அல்ல. தீர்மானங்கள் உள்நாட்டில் காணப்பட வேண்டும். சர்வதேச சமூகம்ஆதரவளிக்க முடியும் .
எந்தவொரு ஒப்பீடும் இல்லாத மிக முக்கியமான வெளிநாட்டுசெயற்பாட்டாளர் இந்தியாவாகும்..
தமிழர்களுக்கு சுயாட்சியானதாக வி ருக்கும் 13 வது திருத்தத்தை ஒரு இலங்கை அரசுக்குள் அரசாங்கம் செயற் படுத்த வேண்டும் என்று அவர்கள் தெளிவாகக் கோரியுள்ளனர்,
இலங்கை அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டால், உலகின் சகல மூலையிலிருந்தும் பெரும் ஆதரவு இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா அல்லது சீனாவில் யாரும் அதை எதிர்க்க மாட்டார்கள்.
கேள்வி ; 13 ஆவது திருத்தம் ஒரு இந்திய அனுசரணையுடனான தீர்வாகும்அத்து டன் அமுல்படுத்துவதில் மிகவும்சவாலான விவகாரம்.பொறுப்புக்கூறல் வழிமுறைகளின் அடிப்படையில்உண்மையில் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கின்ற ஐ. நா.மனிதஉரிமைகள் பேரவையின் தலையீட்டு நடவடிக்கைகளை என்னால் பார்க்க முடியவில்லை, . இது சமூகங்களை மேலும் பிளவுபடுத்துகிறதே?
பதில்;உதாரணமாக, இந்தியாவின் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவர் பிரச்சினைக்கு தீர்வுகோரினார் என்று நான் நம்புகிறேன் . நிச்சயமாக அவர் அவற்றை திணிக்க வில்லை; தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு ஒருவித சுயாட்சி தேவை என்பதை அங்கீகரிப்பதற்கான முன்னோக்கி செல்லும் வழியை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழர்களை முதல் தரத்தினராக பார்க்க வேண்டும், அவர்களின் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக அல்ல.
அந்த தருணத்தில் எனக்கு சிங்கள தேசியவாதிகள் மற்றும் சில சமயங்களில் தீவிரவாதிகளிடமிருந்து நிறைய விமர்சனங்கள் வந்தன.
சமீபத்தில் நான் பிரபாகரனைக் கொன்ற நபர் என்று கூறி புலிகளில் மீ தமாக இருப்பவர்களால் இதேபோல் அல்லது மோசமாக விமர்சிக்கப்பட்டேன்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் அர்த்தமற்றவை, அந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை.
இது மக்களின் வாழ்க்கை மற்றும் மரணம் பற்றியது என்பதை நாங்கள் அறிவோம், இலங்கையில் சமாதானத்தை கொண்டுவர முடிந்தால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்.
ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், எங்களால் வெற்றிபெற முடியவில்லை மற்றும் ஏராளமான இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்
கேள்வி ; உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருக்கிறதா அல்லது உங்கள் வகிபாகத்தில் ஏதேனும் தோல்விகளைக்பார் கிறீர்களா?
பத்தி;எங்களால் எதையும் செயற் படுத்த முடியவில்லை; (ஜனாதிபதி) சந்திரிகா அல்லது பிரபாகரன் மீது சமாதானத்தை அமு ல்படுத்த எந்த அழுத்தத்தையும் நாங்கள் கொடுக்க முடியாது.
அந்த நேரத்தில் இரு தரப்பினரும் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று விரும்பியதை மட்டுமேஎங்களால் செய்ய முடிந்தது.
சமாதானத்துக்காக மக்கள் போராடுவதை ஆட்கள் ஊக்கமிழக்கசெய்வதை நான் விரும்பவில்லை, இன்று உலகில் பல மோதல்கள் உள்ளன. இது ஒரு ஆபத்தான வேலையாகும்., அது அடிக்கடி தோல்வியடையும், ஆனால் உலகில் சமாதானத் தைதோற்றுவிப்பவர் களேஎமக்கு அதிகம் தேவை.
கேள் வி; இலங்கையில் மற்றொரு ஆயுதப் போராட்டம் இருக்குமா?
பதில்; இலங்கையில் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டங்கள் எதுவும்இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடு எதனையும் நான் காணவில்லை, ஏனெனில் இலங்கை மக்கள் போரினால் மிகவும் களைப்படைந்து இருப்பதாக நான் நினைக்கிறேன்.
யுத்தத்துக்கு முக்கிய காரணமான தமிழ் தேசிய பிரச்சினைக்குதீர்வு காணப்படவில்லை . தமிழ் மக்களின் கண்ணோட்டத்தில் இலங்கை எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதைஇலங்கையின் சிங்களமக்கள் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது.
தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளைப் போல உணர்கிறார்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பொலி ஸ் அல்லது அதிகாரிகளை அணுக முடியாது. முன்னோக்கி செல்வதற்கு தமிழ ர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதேவை உள்ளது
கே ள்வி; புலம்பெயர்ந்தா இலங்கையர் திரும்ப செயற்படும் மூலோபாயத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? அது எவ்வளவுவுக்கு முக்கியம்?
பதில் ;புலம்பெயர்ந்தோருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. புலம்பெயர்ந்த இ லங்கையர் முக்கியமாக தமிழ ர்களாகும். ஆனால் சிங்களவர்களும்உள்ளனர் , அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் மிகவும் படித்த குழுவினர் .
என்து தேசமான நோர்வேயில், இளம் தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சராசரி இளம் நோர்வேயர்களை விட மிகச் சிறப்பாக செயற் படுகிறார்கள்.
கனடா, ஜே ர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இதுதான் நிலைமை. இலங்கையில் அதனை [ஆற்றலை ] நல்ல பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள், வேலைகள், தொழிற்சாலைகள் அல்லது சுற்றுலா தலங்களில் முதலீடு செய்ய முடிந்தால் அது இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும்.
புலம்பெயர் மக்கள் அனைத்து சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவை வழங்க வேண்டும், ஆனால் இலங்கையில் சமாதான முயற்சி இலங்கையாலேயே வழிநடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சன, அறிவுசார் மற்றும் தார்மீக ஆதரவையும் வழங்குவதற்கு புலம்பெயர்ந்தோரை ஊக்குவிக்க வேண்டும்.
“Sri Lankans will have to find a solution, not foreigners” – Erik Solheim
dailymirror