கொள்ளை அடிப்பவன் வள்ளலைப்போலே.. கோவிலை இடிப்பவன் சாமியைப்போலே வாழ்கின்றான்.. என்பது சினிமா பாடல்வரிகள்.
ஆனால் இப்பாடல் வரிகளுக்கு ஒப்பாகவே இன்றும் எம் மத்தியிலும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்பேர்வழிகளில் ஒருவர்தான் மண்முனை வடக்கு பிரதேச செயலராக கடமை புரியும் வன்னிய(அ)சிங்கம் வாசுதேவன்.
இவர் தன்னை மிகவும் நேர்மையானவராக வெளிக்காட்டிக்கொண்டு, தனக்கு கீழே கடமைபுரிகின்ற கிராமசேவகர்கள் மற்றும் காணிவிகவகாரங்களுக்கான உத்தியோகித்தர்களை தவறாக வழிநடாத்தி நுணுக்கமான முறையில் காணிக்கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றார் என்பதனை இலங்கைநெட் ஆதாரங்களுடன் முன்வைக்கின்றது.
ஆரையம்பதியைச் சேர்ந்த மாதவபுவனேஸ்வரன் வசீகரன் என்பவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த ஜெயபூமி அளிப்பொன்றை கல்லடியைச் சேர்ந்த வன்னியசிங்கம் ஜெயதேவன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். குறித்த காணியானது ஜெயபூமி அளிப்பாகும், அவ்வளிப்பானது விற்பனை செய்யப்படும்போது 17 நிபந்தனைகட்கு உட்படுத்தப்படுகின்றது.
ஆனால் இவ்வளிப்பு வன்னியசிங்கம் ஜெயதேவன் என்ற தனது சகோதரனுக்கு விற்பனை செய்யப்படும்போது வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேச செயலராக பின்வரும் நிபந்தனைகளை மீறி காணி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது சகோதரனுக்கு ஏழை மகன் ஒருவனின் காணியை தாரைவார்த்துள்ளார்.
ஜெயபூமி அளிப்பு செய்யப்பட்ட காணியொன்றை விற்பனை செய்கின்றபோது காணி உரிமையாளர் நிர்கதியாகாதவாறு மூன்றில் இரண்டிற்கு மேற்படாத பங்கினை மாத்திரமே விற்பனை செய்யமுடியும். ஆனால் பிரதேச செயலர் முழுக்காணியையும் விற்பனை செய்வதற்கு அனுமதியை வழங்கி பயனாளியை நிர்கதிக்குள்ளாக்கியுள்ளதுடன் தனது சகோதரனின் பெயருக்கு காணியை மாற்றுவதற்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும் அவர் அந்நபரை நிர்கதிக்குள்ளாக்கினாரா அல்லது மிகவும் பெறுமதிவாய்ந்த குறித்த காணியை தனது தம்பியின் பெயருக்கு தாரைவார்த்துவிட்டு பிறிதொரு அரசகாணியை குறித்த நபருக்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வழங்கியுள்ளாரா என்பதும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
இரத்த உறவு அல்லாத ஒருவருக்கு ஜெயபூமி காணியை விற்பனை செய்யவோ அல்லது அன்பளிப்பு செய்யவோ முடியாது என்ற நிபந்தனையை மீறி பிரதேச செயலர் தனது சொந்த சகோதரனுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.
விற்பனை செய்யப்படுகின்ற காணியானது சமவருமானம் பெறுகின்ற மக்கள் வர்க்கத்தினருக்கே விற்பனைசெய்யப்படவேண்டும். அதாவது வருட வருமானம் 144000 ரூபாவிற்கு மேற்படாத ஒருவருக்கே விற்பனை செய்ய முடியும். ஆனால் குறித்த காணியை கொள்வனவு செய்யும்போது பிரதேச செயலாளரின் சகோதரன் ஆசிரியராக கடமை புரிந்துள்ளார்.
இவ்வாறாக மூன்றுக்கு மேற்பட்ட நிபந்தனைகளை அப்பட்டமாக மீறியே வாசுதேவன் தனது சகோதரனுக்கு காணியை தாரைவார்த்துள்ளார் என்பதுடன் நிபந்தனைகளை மீறியதாக சட்டச்சிக்கல்கள் வரும்போது தன்னை காத்துக்கொள்வதற்காக கிராம சேவகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச ஊழியர்களை சூட்சுமமாக பயன்படுத்தியுள்ளார். தனது மோசடிகளுக்காக வாசுதேவன் மிகவும் கோழைத்தனமாகவும் கீழ்தரமாகவும் சென்று தனக்குக்கீழ் பணிபுரியும் உத்தியோகித்தர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதாகவும் தனது தேவை முடிந்தவுடன் அவர்களை கைகழுவி விடுதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறு வாசுதேவன் கல்முனையிலிருந்து மண்முனை-வடக்கு வரை மேற்கொண்டுள்ள சகல மோசடிகளையும் இலங்கைநெட் விசேட கவனம் செலுத்தி ஆராய்ந்து வருகின்றது என்பதுடன் வாசுதேவனுக்கு துணைநிற்கும் ஊழியர்களையும் சேர்த்தே நீதியின் முன்நிறுத்த முயற்சிக்கின்றது என்பதையும் இத்துடன் அறிவிக்கின்றது.
வாசுதேவன் சக ஊழியர்களை மாத்திரமல்ல அரசியல்வாதிகள் மற்றும் மேலதிகாரிகளையும் இவ்வாறே பயன்படுத்திவருவது அவரது வரலாற்றினூடாக நிருபணமாகியுள்ளது. மட்டக்களப்பு அரசாங்க அதிபராகவிருந்த திருமதி சார்ள்ஸ் அவர்களின் எடுபிடியாக செயல்பட்ட வாசுதேவன், திருமதி சார்ள்ஸை தமிழ் தேசியக் கூட்டமைப்பை கொண்டு விரட்டிவிட்டு கதிரையை பிடித்த உதயகுமாரின் நெருங்கிய சகாவானார். வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய வாசுதேவனை உதயகுமார் விசேட சிபார்சில் மண்முனை-வடக்கு க்கு கொண்டுவந்தார். தொடர்ந்து உதயகுமாரை விரட்டிவிட்டு கதிரையைப்பிடித்த கலாமதியின் வாலிலும் தொங்கினார். ஆனால் தற்போது அரச அதிபராக கடமையேற்றுள்ள திரு. கருணாகரன் அவர்கள் வாசுதேவன் காலத்திற்கு காலம் கதிரையிலிருப்பவர்களின் காலைநக்கும் குள்ளநரித்தனமான ஒட்டுண்ணி என்பதனை புரிந்துகொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இங்கு அருவருக்கத்தக்க பிரதான விடயம் யாதெனில் இவ்வாறான கயவனுக்கு ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனலில் விருதுவேறு கிடைத்துள்ளதாக மட்டக்களப்பில் பீத்திக்கொள்கின்றார்கள். எது எவ்வாறாக இருந்தாலும் ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் இவருக்கு வழங்கியுள்ள விருதினை மீளாய்வு செய்து வருகின்றது. இவர் மேற்கொண்டுள்ள மோசடிகள் சில ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனலிடம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வாசுதேவனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
வாசுதேவனின் மோசடிகளை தொடர்சியாக தரவேற்றும் என்ற தகவலுடன் அடுத்த பதிவில் ‘வாசுதேவனுக்கு உறுதிக்கு மகுடம்’ என்ற விருதுடன் மீண்டும் சந்திப்போம்..