தெற்கை போன்றே வடக்கிலும் இடமாற்றங்களுக்கு பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக தான் அறிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கிற்கான இணைப்பாளருமான எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

வடக்கில் இராணுவ மயமாக்கல்கள் கைவிடப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டு என்பதே ஜக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு. எங்களது பயணத்தின்போது வவுனியா, முல்லைதீவு ,கிளிநொச்சி என எவ்வளவு படையினர் மக்கள் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளனர். என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

வடக்கிலுள்ள மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையாக சஜித் பிறேமதாசவில் நம்பிக்கை வைத்து வாக்களித்திருந்தனர். தென்னிலங்கைபோன்று வடக்கிலும் இடமாற்றங்களை வழங்காதிருக்க பாலியல் லஞ்சம் கோரப்படுவதான தகவல்கள் கிடைத்துள்ளன.

டொலர்களிற்காக அலையும் இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை. அதிலும் பாலியல் லஞ்சம் கோரி பாதிக்கப்பட்ட பெண்களிற்கு நீதி கிடைப்பதென்பது கேள்விக்குறியே என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *