இலங்கையின் அரசிலமைப்பின் நான்காவது அத்தியாயம் மொழிக்காக வகுக்கப்பட்டுள்ளது. 18 தொடக்கம் 25 வரையும் உள்ள உறுப்புரைகள் மொழியையும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் விபரிக்கிறது.
இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியென 18வது உறுப்புரையும் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகள் என 19வது உறுப்புரையும் குறிப்பிடுகின்றது. இருப்பினும் அரசியலமைப்பிற்கான 13வது திருத்தின் மூலம் 18(i) என்ற உறுப்புரையின் பிரகாரம் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாகும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகும் எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உலகில் இரு மொழிகளை தங்களது நாடுகளின் அரச கரும மொழிகளாக ஆக்கிக் கொண்ட நாடுகள் வரிசையில் பின்லாந்து, பெல்ஜியம், தென்னாபிரிக்கா, கனடா, அயர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன.
மொழியை அடிப்படையாகக் கொண்டு எவரும் பாகுபாடு காட்டக்கூடாது. இது ஓர் அடிப்படை உரிமையாகும்.
இவ்வாறு, மொழி உரிமை தொடர்பாக அரசியலமைப்பின் 4ஆம் அத்தியாயத்தின் உறுப்புரைகள் குறிப்பிடுகின்றவேளை, 25வது உறுப்புரையானது 18வது உறுப்புரையிலிருந்து 24வது உறுப்புரை வரையிலும் விபரிக்கப்பட்ட விடயங்களை பயன்படுத்துவதற்கான சகல விதமான வசதிகளையும் ஏற்பாடுகளையும் அரசாங்கமே எற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்பதையும் விபரிக்கிறது.
மொழி உரிமைகள் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டங்கள் காத்திரமாகக் கூறியிருக்கின்றபோதிலும் அச்சட்டங்கள் சரியான விதத்தில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விடயமாகும். இலங்கையில் தமிழ்மொழிக்கான உரிமையும் அதற்கான அந்தஸ்தும் வழங்கப்படுவது அவசியமாகும்.
பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிக்கும்.
எந்தவொரு பிரசைக்கும், தனது இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் சிந்தனைகள், மற்றும் பிறப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் சலுகைகளை வழங்கவோ, வேறுபாடு காண்பிக்கவோ முடியாது’ என்று உறுப்புரை 12(2) தெரிவிக்கின்றது. இது கீழ்க்காணும் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 2ம் உறுப்புரையை ஒத்ததாகும்.
‘இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு கருத்துகள், தேசிய சமூக அடிப்படை, சொத்து அல்லது வேறெந்த தராதரத்தின் அடிப்படையில், வேறுபாடின்றி, அனைவருக்கும் இவ்வுறுப்புரையில் கூறப்பட்ட சகல உரிமைகளும், சுதந்திரமும் உரித்தாகும்’
எனவே, மொழி உரிமையானது, அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமையாகும். குறிப்பாக அதன் 13 ஆம் திருத்தமும், இலங்கையின் சட்ட மற்றும் நீதிப் பொறிமுறைக்கான 1956ம் ஆண்டின் அரசகரும மொழிகள் சட்டம், விசேட வர்த்தமானி 1620ஃ27 பொது நிர்வாகச் சுற்றறிக்கைகள், என்பனவும் இந்த விழுமியங்களுக்கு மதிப்பளிப்பவையாகும். ஓர் அமைச்சு செயற்படுத்தப்பட்டு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சு என்றும் பெயரிடப்பட்டது. இவ்வமைச்சு, அரசகரும மொழிகள் திணைக்களம், அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகளின் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்பவற்றுக்குப் பொறுப்பாகவிருந்தது. இலங்கை, முரண்பாடற்ற முன்னேற்றத்தை எய்த வேண்டுமெனில், மொழியினால் ஏற்படும் தடைகளை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை இம் முக்கியமான நிறுவனங்களின் பணிப்பாணை அங்கீகரிக்கின்றது.