யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமநாதன் அங்கயன் குழுவினரே தம்மீது தாக்குதல் நடத்தியதாக யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
யார் இந்த அங்கயன் ராம நாதன்?
முன்னர் தீவிர பிறேமதாசா விசுவாசியான ராமாபுரம்,பத்மா புறப்பட்டி டெவலர்ப்ஸ்,capital park appartmets என பல நிறுவனத்தின் உரிமையாளர் ராம நாதனின் ஒரே மகனே இந்த அங்கயன். இவருக்கு சிங்கப்பூரில் பலகோடி முதலீடுகள் உள்ளது வேறு கதை. முன்னர் சிங்கப்பூரில் இருந்து ஏஜென்சி வேலை செய்த போது பல இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர் என்பதும் இவரது பழைய வரலாறு.
இவரது சகோதரனான ராசுக்குட்டி என கொழும்பு வட்டாரத்தில் அறியப்பட்ட மாபியா கப்பல் வர்த்தகருக்கும் மகேஸ்வரனுக்கும் தொழில் போட்டி இருந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் மகிந்த சகோதரர்கள் இருவரையும் தமது குடும்ப தொழிற்துறையை வளர்த்துக்கொள்ள வளைத்துப்போட்டுக்கொண்டனர். ராசுக்குட்டியின் 25க்கும் அதிகமான கப்பல்களின் வருவாயில் ஒரு பகுதி மகிந்த சகோதரர்களுக்கும் பின் வழியால் சென்றடையும். ஒரு சமயம் கருணா குழுவினால் ராசுக்குட்டி கடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்ட போது மகிந்தவின் தலையீட்டால் தடுக்கப்பட்டது. இதுதான் இன்று அங்கஜன் ராம நாதனின் அரசியல் பிரவேசம் வரை வந்துள்ளது.