யாழ்ப்பாணச் சமூகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் விஜிதாவின் இறப்பை தற்கொலை எனக் கருதிவிட்டு கடந்து போகின்றதா?
இவரின் இறப்பிற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரமுகர் சுகிர்தன் காரணம் என அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சட்ட நுனுக்கம் மற்றும் அரசியல் பலத்தினால் இந்த மரணம் மூடி மறைக்கப்பட்டு சுகிர்தன் காப்பாற்றப்பட்டமை மிக வேதனையான செயல் என பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணத்திற்கான காரணம் என்ன என கண்டறிவதில் ஏன் யாரும் ஆர்வம் காட்டவில்லை? குறிப்பாக ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஸ், சுயாட்சிக்கான மக்கள் களகத்தின் தலைவி அனந்தி சசிதரன், ஜனாதிபதியின் நெருங்கிய சகா விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா என யாழின் மிகப் பெரும் உரிமை மீட்பாளர்கள் விஜிதாவின் மரணத்திற்கு கேள்வி எழுப்ப வில்லை சுமந்திரனின் இணைப்பாளர் என்பதாலா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவர்களின் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தென்படுகின்றது.
ஊடகவியலாளர்கள் கூட இந்த விடயத்தில் அமைதிப் போக்கைக் கடைப்பிடிப்பிடிப்பதுடன் இவ் விடயத்துடன் ஒரு இராணுவம் தொடர்பு என்றால் எப்படி செயற்பட்டிருப்பார்கள் இந்த ஊடகவியலாளர்கள் ஏன் இதில் அதிகளவு ஈடுபாடு காட்டவில்லை காரணம் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பவத்தில் உள்ளதாலா….
எல்லாவற்றுக்கும் போராடும் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தப் பெண்கள் அமைப்புக்கள் ஏன் இந்த விடயத்தில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என இதுவரை கோரிக்கை விடவில்லை.
இங்கு தற்கொலை என்பது குறித்த பெண்ணின் தனிப்பட்ட முடிவாக இருக்கலாம்.
ஆனால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்தாலே உண்மையான விடயம் வெளியே வரும் என்பதுடன் இனி வரும் நாட்களில் நடக்கும் ஆபத்துக்கள் கூட தடுக்கப் படும்.
தற்கொலைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாதவரை இவளின் இதே காரணத்திற்காக தற்கொலைகள் தொடரும் என்பது மட்டும் உண்மை.