“இன்று, தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தமிழர்களின் மத்தியில் தனது பிரதிநிதித்துவத்தினை இழந்து நிற்கின்றது. தமது நிலையில்லாத முடிவுகளாலும், விலைபோகும் தன்மையினாலும் தமக்குரிய ஸ்தானத்தினை இழந்து, நம்பிக்கைத்தன்மையினை இழந்து சிங்களத்தினதும் இந்தியாவினதும் தாளத்துக்கு ஆடும் கூத்தாடிகள்போல் நடந்துகொள்வது உண்மையிலேயே கேவலமான ஒரு விடயம். இதற்குள்ளும் இலங்கையின் பாராளுமன்றத்தில் திரு.கஜேந்திரன் அவர்கள் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழீழத் தேசியம், தமிழரின் வரலாற்று உரிமை தொடர்பாக துணிச்சலாக தெரிவித்திருந்த கருத்துரைகள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய, வரவேற்கத்தக்க விடயந்தான்.”  ( பருத்தியன் )

“குதிரை” கஜேந்திரனின் பேச்சை மெச்சியுள்ளீர்கள்; ஆனால் ஏன் அவரை இதுவரை அரசாங்கம் அவரது புலித் தொடர்பு குறித்து விசாரிக்கவில்லை என்பது பற்றி ஒரு துளி தானும் எண்ணவில்லையா, பருத்தியன்..?
கஜேந்திரனின் நாணயத்தை அவரது பாராளுமன்ற உரையை மட்டும் வைத்து மதிப்பீடு செய்துவிட முடியுமா?…

அப்படிப் பார்த்தால் – இராணுவத்துடன் இருக்கும் ராமின் மாவீரர் தின உரையையும் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டியுள்ளது.

இராணுவத்துடன் உள்ள ஒருவர் மாவீரர் தின உரையே நிகழ்த்த முடியுமானால், கஜேந்திரன் பாராளுமன்றில் இப்படி ஒரு உரையாற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?… எவ்வளவு பேரம் பேசப்பட்டிருக்கும்?

எங்கள் காதுகளில் யாரும் பூ சுற்ற வேண்டாம்.

முன்னர் – தமிழ்செல்வனின் வாலைப் பிடித்துக்கொண்டு – யாழ்ப்பாணத்திலிருந்து 40 ஆயிரம் இராணுவச் சவப்பெட்டிகள் அனுப்புவோமென வீரம் பேசியவர்.

பின்னர் – நோர்வேயில் ஒளித்துக்கொண்டு –  ”தமிழ்நெற்” ஜெயாவின் மடிக்குள் இருந்து கொண்டு இறைமையுள்ள தமிழீழம் கேட்டவர்.

முன்பு – 40 ஆயிரம் சவபெட்டிக் கதைக்காக பாராளுமன்றில் கஜேந்திரன் மேல் சீறிப்பாய்ந்த சிங்களங்களும் தேவானந்தாக்களும் இம்முறை ஏன் சீறிப்பாயவில்லை?!

ஏனென்றால் – இந்த முறை குதிரை கஜேந்திரன் “கதிரை கஜேந்திரனாக” மாறி 40 ஆயிரம் தமிழர்களின் வாக்குகளை ஒரு பேரத்தில் காணிக்கை ஆக்கிவிட்டார்.

அவ்வளவு தான் கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *