இவர்தான் அருளர் இரும்பொறை

இங்கு நாம் ஏன் இவரை அருளர் என அழைத்தோம் என யோசிக்கிறீர்களா?  இவர் மே 18க்கு பின்னர் முளைவிட்ட காளான். தன்னை கஸ்ரோ தனியான வேலையாக அனுப்பியதாக ரீல் விட்டுக்கொண்டு களம் புகுந்த இவர் தன்னை அரவிந்தன் என்றும் இரும்பொறை அங்கு தனக்கு தலைவர் வைத்த தூயதமிழ் பெயர் என்றும் சொல்லிக்கொள்வார்.

அருளரின் கதைக்கு வருவோம். 1983இல் அனைத்து இயக்கத்தலைமைகளையும் ஒன்றுபடுத்தும் தூதராக ஈரோஸ் அருளரே செயற்பட்டு வந்தார்.  இதனால் எப்போதும் அருளரில் தனிப்பிரியம் உண்டு என்பது வேறு கதை. யார் அருளர் எனத்தெரியாதவர்களுக்கு இலகுவில் விளங்கப்படுத்த மாதங்கி அருள்பிரகாசம் என்கின்ற மாயா அல்லது மியா என்ற பிரபல பாடகியின் தந்தையார் தான் அருளர்.  இப்போது அருளர் தானும் ஜனாதிபதி தேர்தலில் பங்கெடுக்க வேட்புமனு தாக்கல் செய்ய கொழும்பு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதே அருளரின் நிலையெடுத்த‌ திருவாளர் அரவிந்தன் தன்னை பெரும் வித்தகராகக்காட்டிக்கொண்டு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் பிரிந்து நிற்பவர்களை ஒன்றுபடுத்தப்போவதாக எல்லாத்தரப்புடனும் தொடர்பாடலை மேற்கொண்டார். கதைக்கும் எல்லோரிடமும் தான் கஸ்ரோவின் தனிப்பட்ட வேலையாக ஜரோப்பாவுக்கு வந்ததாககூறிக்கொள்வார். கஸ்ரோவுக்கு மணப்பெண் தேடி வந்தாரோ தெரியவில்லை. ஆனால் உண்மையில் இவர் ஜேர்மனி பொறுப்பாளராக செயற்படவே அனுப்பப்பட்டவராம்.வாகீசன் தொடர்பாக தொடர்ச்சியாக கிடைத்த ஒழுக்ககேடுகள் தொடர்பான முறைப்பாடுகளும் ஜேர்மனியில் சேகரித்து தரச்சொன்ன நிதியின் இலக்கு எட்டப்படவில்லை என்பதும் வாகீசனை மாற்றுவதற்கு கஸ்ரோ அண்ணை முடிவெடுத்ததாக இரும்பொறை தனக்கு நம்பிக்கையானவர்களுக்கு சொன்ன தகவல். அதைவிட பதிவு என்ற இணையத்தளம் மற்றும் ஜபிசி ஆகியவற்றில் தான் ஜேர்மனி பொறுப்பாளராக இருந்து கொண்டு அதிகமான நேரத்தை செலவளிப்பதாகவும் தகவல்கள் வன்னிக்கு எட்டியுள்ளது.

ஆனால் இரும்பொறை ஜேர்மனியை அடைந்த கெட்ட நேரம் வன்னியில் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. கஸ்ரோ இறுதி நேரத்தில் எவருக்கும் ஒன்றும் சொல்லாமல் அதாவது இனி வரும்காலத்தில் யாருக்கு கீழே செயற்பட வேண்டுமென்ற ஒரு அறிவுறுத்தலும் கொடுக்காமல் பன்முகநாயகனாம் குப்பிகடித்துக்கொண்டார்.இது இரும்பொறைக்கு கெட்ட நேரம் தானே.  ஏனெனில் கடந்த 30வருடங்களாக (இப்போது செயற்படுபவர்களின் வயதை ஒத்த) தன்னை பல்வேறு புலனாய்வு அமைப்புகளுக்கும் மறைத்து செயற்பட்ட கேபியினையே துரோகியாக்கிய வாகீசன் இரும்பொறையை துரோகியாக்க கன நேரம் செல்லாது என உணர்ந்துகொண்டார். கேபியுடன் இரும்பொறை தொடர்பேற்படுத்தி தன்னை அனுப்பிய நோக்கத்தை சொன்னார். கேபிதான் என்ன செய்ய முடியும். தம்பி நீர்,  நெடியோன், வாகீசன் இவர்களுடன் கதைத்து அவங்களை ஒரு வழிக்கு கொண்டு வரப்பார் என மட்டும் தான் சொல்ல முடிந்தது.  இனி எப்படி சொல்லி ஜேர்மனி பொறுப்பை எடுப்பது?  அனுப்பிய கஸ்ரோவுமில்லை. அதைவிட இவர் நந்தவனத்தில் ஒரு சம்பளத்துக்கு பணிபுரிந்து 1996இல் இயக்கத்தில் முழு நேரமாக இணைத்துகொண்டவர். சீனியோரிட்டியுமில்லை.என்ன செய்வது ?

தப்புத்தாளங்கள் இனி வழி தவறியபாதங்கள், இனி இப்படி வாழ்வதென எழுதிய வேதங்கள் என ரஜனிக்காந்தின் பழைய பாடலைப்பாடிக்கொண்டு வாகீசனின் கீழ் செயற்படுவதென முடிவு செய்தார் அருளர் இரும்பொறை.

இனி அவரது பயணங்கள் ஜரோப்பிய பிறீமீயர் லீக்காக மாறியது.

பெந்தகொஸ்தே சபைக்காரரின் அல்லலூயா………….தலைவர் வருவார்……… உயிருடன் இருக்கிறார் என நாடு நாடாக ஜெபிக்கவிட்டு வாகீசன் தனது பொறுப்பை சுதாகரித்துக்கொண்டார். அவர் தொடர்ந்தும் ஜேர்மனியின் தேசியத்தலைவராக இருப்பார்.  ஆமேன் ஆசீர்வதிப்போமாக.

இது முடியவில்லை .  தொடரும் வரவுகளில் பார்க்க,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *