யாழில் விஜிதாவின் இறப்பை தற்கொலை எனக் கருதிவிட்டு யாழ்ப்பாணச் சமூகம் கடந்து போகின்றதா? எனும் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டில் நடந்த பாரிய சந்தேகத்திற்குரிய விடயம் என்னவென்று அனைவரும் நுட்பமாக பார்க்க வேண்டிய காலத்தன் கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.

தீ மூட்டப்பட்டு அணைக்கப்பட்ட பின்னரும் தானாக ஓடிச்சென்று கிணற்றுக்கட்டை தாண்டி குதிக்கும் வலுவோடிருந்த ஒருவர் ‘90%ம் தீக்காயங்களோடு இருந்தார் எனவே மேலதிக சிகிச்சையளித்தும் காப்பாற்ற முடியாதென முடிவெடுக்கப்பட்டமை’ (காலைக்கதிர் பத்திரிகை செய்தியின் கண்டு பிடிப்பு) பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, அதன் பின்னர் அந்தப் பத்திரிகை வாய்திறக்கவில்லை, இதனுடன் அதன் பணி முடிந்தது.

பொதுவான சந்தேகம் விஜிதா தற்கொலை செய்து கொள்வதற்கு சுகிர்தன் வீட்டில் முயற்சித்து ‘90%ம் தீக்காயங்களோடு இருந்தார் எனக் கூறுகின்றனர் சுகிர்தனின் வீட்டார்கள்.

அப்படியான ஒருவர் எப்படி கிணற்றில் குதிக்க முடியும் இச் சம்பசம் இடம் பெறும் போது, பொலிஸ் திணைக்களகத்தில் பணிபுரியும் 21வயதுடைய சுகிர்தனின் மகன் பணி முடிந்து மது போதையில் வீட்டிற்கு வந்ததாகவும், அங்குள்ளவர்களால் ஓரளவாக தீ அணைக்கப் பட்ட நிலையில் இருந்த விஜிதாவை கிணற்றில் துாக்கி போட்டதாகவும் நேரில் பார்த்த அயலவர் ஒருவர் எமது உள் பெட்டிக்கு தகவல் பகிர்ந்துள்ளார்.

குறித்த சம்பவங்கள் இடம் பெறும் போது வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாள் சுகிர்தன் கதவைப் பூட்டி கொண்டு வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

விஜிதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விஜிதாவின் தற்கொலையை காரணமாக வைத்து கொலைசெய்யப்பட்டாரா, பொலிசார் கண்டுகொள்ள வில்லை என்று தெரிந்தால் யாழ்ப்பாணச்சமூகம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்!!

குறைந்தபட்சம் தமிழரசு கட்சி தனது சுயமரியாதை காப்பாற்றி கொள்ள வேண்டும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

அப்படி வெளியேற்றப்படாது விட்டால், கட்சியின் கொள்கைகளில் இதுவும் ஒன்று என்பதை நாம் முடிவாக கொள்ள வேண்டும், கள்ளத்தொடர்பும் பொம்பள சேட்டையும் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றென அனைவரும் கருதலாம்.

இந்திய அரசியலை விட கேவலமான அரசியல் எமது தேசத்தில் இப்போது அரசியல்வாதிகள் எதையும் செய்து விடலாம் என்ற நிலை ஒரு அரசியல்வாதியும் ஒரு ஊடகமும் சேர்ந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பது இப்போது நடைமுறையில் உள்ளது.

இதுவே சாதாரண நபர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால் நிச்சயமாக பொது அமைப்புகள் அரசியல்வாதிகள் என்று குரல் கொடுத்திருப்பார்கள்.

ஆனால் தமிழரசு கட்சியின் முக்கிய நபர் ஒருவர் சம்பந்தப்பட்ட இந்த விடயம் அப்படியே மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இதற்காக வழக்காடவும் பிரபல சட்டத்தரணியும் களம் இறங்காமை எல்லோரும் கூட்டுக் களவாணிகளா என்ற சந்தேகம் இப்போது வலுப்பெறுகின்றது.

பொதுவாழ்வில் ஈடுபடுவர்களுக்கு சுய ஒழுக்கம் முக்கியம், தனிப்பட்ட பிரச்சனை என்று தப்பி சென்று விடமுடியாது.

10வயது பெண் குழந்தை தாய் தற்கொலை செய்துள்ளதால் தவிக்கிறாள், குழந்தையின் தாயான விஜிதாவின் மரணத்திற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் காரணம் என்ற செய்தி வந்துள்ளது நாட்கள் பல கடந்து விட்டன, இன்று வரை மறுப்பு செய்தியோ அல்லது தன்னிலை விளக்கமோ வராதவகையில் செய்தியில் உள்ளது, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் நேரடியாக தொடர்பு பட்டதை யாரும் மறுக்க முடியாது.

தமிழரசுக் கட்சியில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தொலைபேசி வாயிலாக கதைக்கும் போது கூறிய யாரும் அறியாத மிக முக்கிய தகவல்கள….

மேலும் கூறுகையில்,

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் மற்றும் விஜிதா ஆகிய இருவரும் துணைகளை பிரிந்தவர்கள்.

இறக்கும் வரை கடந்த மூன்று வருடங்கள் திருமணமின்றிய இருவரும் உறவில் இருந்துள்ளனர்.

சுகிர்தன் மக்கள் பிரதிநிதி விஜிதா அரச அலுவலர்.

விஜிதா இறக்கும் போது கடைசியாக நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்யவேண்டும் என்று விஜிதா அடம்பிடித்திருக்கிறார்.

அதற்கு விஜிதா வெளியில் சொல்ல முடியாத சுகிர்தன் மற்றும் விஜிதாவுக்கு தெரிந்த பரம இரகசியம் இருந்துள்ளது, தனிமையில் வாழும் விஜிதாவின் சமூகக் கேள்விகள் தொடர்பில், இறப்பதற்கு முன் கடுமையாக விவாதித்துள்ளார் விஜிதா.

சுகிர்தன் ஒரு வாரமாக விஜிதா வீட்டிற்கு செல்வதை நிறுத்தியுள்ளார், தனது கேள்விக்கான பதிலை சுகிர்தன் வழங்க வில்லை என்பதுடன் விஜிதாவைக் கண்டவுடன் சுகிர்தன் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டவே விஜிதா இந்த முடிவை எடுத்துள்ளார்.

இப்படியானவர்கள் சட்டத்தின் நிறுத்தப்படுவதை தடுக்கும் தமக்கு மொழிப் புலமை உள்ளது எனக் கூறிக்கொண்டு தமிழ் இனத்திற்கே சாபக்கேடான சட்டத்தரணிகள் முதலில் தண்டிக்கப் பட்டு சமூகத்தில் இருந்து அகற்றப்பட்டாலே இப்படியான சமூகவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படும் என வெளிநாட்டுப் பயணம் ஒன்றில் உள்ள குறித்த நாடாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

பரஸ்பர புரிந்துணர்வில் திருமணத்திற்கு அப்பாலான உறவில் இருந்தமை பெண்ணினதும் ஆணினதும் அறிவீனம். (சட்டத்தில் தவறா இல்லையா என்று நாம் கூறமுடியாது ) என்பது எனது நிலைப்பாடு அதேபோல திருமணம் நோக்கிய எதிர்பார்ப்புடன் இருந்தவருடன் அந்த எதிர்பார்ப்பை கொடுத்து உறவில் இருந்தமை ஆணினதும் தவறு, நம்பிக்கை துரோகம் என்ற வகையில் இது வரும்.

குறிப்பாக மக்கள் சேவை செய்ய விரும்புபவர் அல்லது செய்துகொண்டிருப்பவர் நிச்சயம் சுய ஒழுக்கம் உடையவராக இருக்க வேண்டும்.

அவ்வாறல்லாதவர்களை அரசியல் கட்சிகளில் வைத்திருக்க கூடாது நீக்கவேண்டும்.

அப்படியான அரசியல் கட்சிகள் இதுவரை கண்ணில் படவில்லை. சட்டத்தில் தண்டிக்க இடமில்லாதிருந்தாலும் காலம் தண்டிக்கும் என நம்புவோம்.

வித்தியாவின் சாவுக்கு பலர் காரணமானதால்

பொங்கி எழுந்த யாழ்ப்பாண சமூகம்,

விஜிதாவின் சாவுக்கு ஒருவர் காரணம் என்பதாலும் யாழ்ப்பாண சமூகத்தில் நீதிக்காக போராடும் சட்டத்தரணிகள் இல்லாததாலும் அமைதியாக இருக்கிறதா………? தெரியவில்லை

எல்லாவற்றுக்கும் காலத்தை கூறிவிட்டு அனைவரும் கடந்து செல்ல முடியாது, மக்களாகிய நீங்களும் சிந்திக்க வேண்டும்.

வலிகாமம் வடக்கு என்பது யாழ்ப்பாண மாவட்டத்தின் மிகப் பெரும் மக்கள் தொகை உள்ள ஒரு பகுதி அதில் சிந்திக்கும் மக்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்.

கொழும்பில் இருந்து வந்த ஒரு சட்டத்தரணியால் அழிந்த இனத்தின் ஓருமத்தை அடியோடு அழித்து, சமூக சீரழிவில் ஈடுபடுபவர்களை காப்பாற்றும் ஒருவராக உள்ளமை எவ்வளவு கேவலம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *