வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவத்தில் யாழ் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான விஜிதா என்ற குடும்பப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண் யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன் , பெண்ணுக்கு 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது.
தீயில் கருகிய தாய் -தவிக்கும் மகள்
அதேவேளை சுகிர்தன் தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவரும் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுகிர்தனின் மனைவி கடந்த 2020ம் ஆண்டு தனது இரு பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று தனித்து வாழ்ந்துவருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து பெற்றோலுடன் சுகிர்தன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் நகை, பணம் இருக்குமிடங்களை மகளிடம் காண்பித்து விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
சுகிர்தனின் வீட்டிற்குள் சென்று வாக்குவாதப்பட்ட பின்னர் தனது உடலில் பெற்றோல் ஊற்றி எரித்த விஜிதா கிண்றுக்குள் குதித்த நிலையில் மீட்கப்பட்டு யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தவிசாளர் விடுவிப்பு
அவர் தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து தவிசாளர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை இலங்கை சட்டங்களின்படி தற்கொலை ஒரு குற்றச்செயல், தற்கொலை செய்தது உறுதியானால் அதன் பின்னணி காரணங்களை தேடி ஆராய்வதில்லை. அதனால் இந்த வழக்கு இத்துடன் நிறைவடைந்து விடும் என சட்டம் கூறுகிறதாம்.
இது இவ்வாறிருக்க தனது இணைப்பாளரை காப்பாற்றுவதில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தீவிர பிரயத்தனம் எடுத்ததன் காரணமாகவே சுகிர்தன் விரைவாக வெளியில் வர முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஓர் இளம் தாய் , விபரீத முடிவால் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன? உண்மைகள் மறைக்கப்படுகின்றதா?