யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை பகுதியில் அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.
போதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இருவரும்இ வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்ப்பக்கமிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதிகாலை 1.20 மணியளவில் விபத்து நடந்தது.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
தபால்கட்டைஇ யாழ்ப்பாண பல்கலைகழகம் முன் என்ற முகவரியை சேர்ந்த செல்வநாயகம் வென்சன் (31)இ புதிய சந்தைஇ வதிரி என்ற முகவரியை சேர்ந்த விஜயபாரத் நிசாந்தன் (28) ஆகிய இளைஞர்களே உயிரிழந்தனர்.
உயிரிழந்த வென்சன் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிகிறார். நிசாந்தன்இ நெல்லியடிஇ வதிரிச்சந்தியில் மரக்கறி கடையொன்றை நடத்தி வருகிறார்.
அவரது கடைக்கு எதிராக உள்ள- உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அவரது இறுதிச்சடங்கு நடக்கவிருந்தது. உயிரிழந்த இளைஞர்களும்இ நண்பர்களும் இரவு முழுவதும் இறுதிச்சடங்கிலேயே நின்றுள்ளனர். எல்லாரும் அதிக கொகைன் பாவித்துள்ளனர்’.
இளைஞர்கள் கூட்டமாக நின்றதால் புகைப்பதற்கு மேலும் கொகைன் தேவைப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரமென்பதால்இ கலிகை பகுதியிலுள்ள போதை வியாபாரியான அறிமுகமானவரிடம் வாங்கலாமென இருவரும் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முன்பான உணவகத்தில் பணியாற்றும் வென்சனுக்கு அந்த பாதை அவ்வளவு பரிச்சயமற்றது. அவரே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளார். வீதியின் ஆபத்தான வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.